“இதென்னபா புது பிரச்சினை”.. 3வது டி20 போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்?? வெளியான புதிய அறிவிப்பு

இந்தூர்: தென்னாப்பிரிக்க அணியுடனான 3வது டி20 போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுவிட்ட நிலையில், வைட் வாஷ் செய்வதற்கான கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

ரோகித் சர்மா கையை தாக்கிய பந்து.. பதறி போன ரசிகர்கள்.. 400வது டி20 போட்டியில் ஹிட்மேனுக்கு சோகம்ரோகித் சர்மா கையை தாக்கிய பந்து.. பதறி போன ரசிகர்கள்.. 400வது டி20 போட்டியில் ஹிட்மேனுக்கு சோகம்

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இந்தூரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்தியா விளையாடப்போகும் கடைசி போட்டி இதுவாகும். எனவே இதையும் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என ரோகித் சர்மா படை முணைப்புடன் உள்ளது.

புது சிக்கல்

புது சிக்கல்

இந்நிலையில் இந்த போட்டி நடைபெறுவதிலேயே சிக்கல் உண்டாகியுள்ளது. போட்டி நடைபெறும் இந்தூர் நகரில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. நேற்று மாலை இந்திய வீரர்கள், அங்கு சென்றடைந்த போதும் கூட மழைப்பொழிவு இருந்துள்ளதால் பயிற்சி முகாமும் பாதிக்கப்பட்டுள்ளன.

வானிலை நிலவரம்

வானிலை நிலவரம்

இதுகுறித்து வானிலை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டியின் போது 91 சதவீதம் அளவிற்கு மேக மூட்டமாக இருக்கும் எனக்கூறியுள்ளது. எனினும் மழைப்பொழிவதற்கான வாய்ப்புகளும் சற்று குறைவாகவே உள்ளது. வெளிச்சமின்மையும், குளிரும் அதிகமாக இருக்கும் என்பதால் போட்டியில் திருப்புமுணை ஏற்படலாம்.

ரோகித் திட்டம்

ரோகித் திட்டம்

இந்திய அணி கடந்த 2 போட்டிகளிலுமே மிகவும் சிரமப்பட்டு தான் வெற்றியை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் பவுலிங் சொதப்பல் தான். எனவே இந்த முறை பந்துவீச்சாளர்களிடம் இருந்து சிறந்த பணியை பெறுவதற்கான ஆலோசனையில் ரோகித் சர்மா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indore weather Report gives threaten to India vs south africa final clash
Story first published: Tuesday, October 4, 2022, 10:41 [IST]
Other articles published on Oct 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X