2ம் உலகப்போருக்கு பின் இப்படி நடந்ததே இல்லை...3வது டெஸ்டில் படைக்கப்பட்ட சுவாரஸ்ய வரலாறுகள்

அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியில் பல்வேறு புதிய ஸ்வாரஸ்ய வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன.

மோதிரா மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய ஸ்பின்னர்ஸ்களிடையே சிக்கி இங்கிலாந்து அணி 2 இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களுக்கு சுருண்டது.

பிபின் சிங் ஹாட்-ட்ரிக்... 6 கோல் அடித்து வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்சி.. மிகச்சிறப்பு!

குறைந்த நாட்களே நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

 புதிய வரலாறு

புதிய வரலாறு

2ஆம் உலகப்போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில் மிகக்குறைவான பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டி இதுவே ஆகும். இப்போட்டியில் மொத்தம் 842 பந்துகளே வீசப்பட்டது. 2ம் இடத்தில் இந்தியா - வங்கேதம் இடையே 2019ம் ஆண்டு 968 பந்துகளே வீசப்பட்டன. 3வது இடத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையே 2018ல் 1028 பந்துகள் வீசப்பட்டது.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 77 போட்டிகளில் ஆடி 2ம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மோசம்

மோசம்

மொத்தமாக 3வது டெஸ்டில் இரு அணிகளும் சேர்த்து எடுத்த ரன்கள் 387. ஆசிய கண்டத்தில் ஒரு டெஸ்டில் அடிக்கும் குறைவான ரன்கள் இதுவே ஆகும். அதே போல 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 81 ரன்கள் மட்டுமே அடித்தது. இது இந்தியாவுக்கு வருகை புரிந்த நாடுகள் அடித்ததிலேயே மிகக்குறைவாகும்.

ஒரு ஃபாஸ்ட் பவுலர் கூட இல்லை

ஒரு ஃபாஸ்ட் பவுலர் கூட இல்லை

3வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு பந்து கூட வீசவில்லை. இதுபோல நடப்பது இதுவே 2வது முறை. அதே போல ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்கள் எடுத்தோரில் மிகக்குறைவான எகனாமியை ஜோ ரூட் பதிவு செய்துள்ளார். அவர் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்துள்ளார்.

 அஸ்வின் சாதனை முறியடிப்பு

அஸ்வின் சாதனை முறியடிப்பு

10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டிகளில் மிகக்குறைவான எகனாமியை அக்‌ஷர் பட்டேல் பதிவு செய்துள்ளார். அவர் 70 ரன்களை விட்டுகொடுத்து 11 விக்கெட்களை எடுத்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2012ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
INDvsENG 3rd Test: Interesting History's made in ahmedabad Test
Story first published: Friday, February 26, 2021, 12:48 [IST]
Other articles published on Feb 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X