உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டீங்களே...சக்ஸஸ் ஆன பண்ட் ஐடியா..இங்கிலாந்து பேட்ஸ்மேனுக்கு சோதனை

அகமதாபாத் : 4வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேனை ரிஷப் பண்ட் உசுப்பேத்தியே அவுட்டாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து மோதும் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

போட்டியின் போது நல்ல ஃபார்மில் இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாக் க்ராவ்லேவை ரிஷப் பண்ட் தந்திரமாக உசுப்பேத்தியே அவுட்டாக்கியுள்ளார்.

இறுதி டெஸ்ட்

இறுதி டெஸ்ட்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இறுதி டெஸ்ட்

இறுதி டெஸ்ட்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆட்டம்

ஆட்டம்

இன்றை டெஸ்ட் போட்டியில் இதுவரை இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் எடுத்துள்ளனர். கடந்த போட்டியை போன்று இல்லாமல் இந்த பிட்ச் கொஞ்சம் பேட்டிங்கிற்கு உதவுவதாக தெரிகிறது.

தந்திரம்

தந்திரம்

3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரன் அடித்தவர் தொடக்க வீரர் சாக் க்ராவ்லே. இதனால் இவர் இப்போட்டியிலும் முதல் இன்னிங்சில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக அவரை வெளியேற்ற ரிஷப் பண்ட் அவரை உசுப்பேத்திக்கொண்டே இருந்தார்.

வைரல்

வைரல்

பந்துவீசிய அக்‌ஷர் பட்டேலிடம், க்ராவ்லே டென்ஷன் ஆகிறார், டென்ஷன் ஆகிறார் என ரிஷப் பண்ட் சத்தமாக கூறிக்கொண்டே இருந்தார். இதனால் அடுத்த பந்தில் ஆர்வத்தில் இறங்கி ஆடவந்த க்ராவ்லே அவுட்சைட் பந்தில் எட்ஜாகி கேட்ச் ஆனார். இதனால் அதிக ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட க்ராவ்லே 9 ரன்களுக்கு வெளியேறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IndvsEng 4th Test: Rishabh Pant’s Great Idea to dismiss Zak Crawley
Story first published: Thursday, March 4, 2021, 15:49 [IST]
Other articles published on Mar 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X