For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர் காயங்களால அவதிப்படும் வீரர்கள்... அவங்களோட காயங்கள் எப்படி இருக்கு பாக்கலாமா?

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் பரபரப்புக்கு மட்டுமின்றி காயங்களுக்கும் பஞ்சமின்றி காணப்படுகிறது. வீரர்கள் அவ்வப்போது காயமடையும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

Recommended Video

IPL 2021: காலில் ஏற்பட்ட காயம்.. பாதி போட்டியில் வெளியேறிய Moeen Ali

இந்த காயங்களால் வீரர்கள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

எப்படி உள்ளனர் தோனியின் பெற்றோர்.. புது தகவலை வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம்.. விவரம்! எப்படி உள்ளனர் தோனியின் பெற்றோர்.. புது தகவலை வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம்.. விவரம்!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார் உள்ளிட்டோரும் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர் காயங்கள்

தொடர் காயங்கள்

ஐபிஎல் 2021 தொடர் மட்டுமின்றி முன்னதாக ஆஸ்திரேலியா தொடர் மற்றும் இங்கிலாந்து தொடர்களிலும் இந்திய வீரர்கள் தொடர் காயங்களுக்கு உள்ளாகினர். கிரிக்கெட்டில் ஒரு கேட்சை பிடிக்கும்போதோ, பவுண்டரி அல்லது சிக்சை தடுக்கும்போதோ அவர்களது டைவும் அதையடுத்து ஸ்லிப்பாகி காயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

பாதியில் வெளியேறிய புவனேஸ்வர்

பாதியில் வெளியேறிய புவனேஸ்வர்

கடந்த சில மாதங்களாக காயங்களால் அவதிக்குள்ளான பௌலர் புவனேஸ்வர் குமார் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் களமிறங்கி அதிரடி கிளப்பினார். ஐபிஎல் 2021 தொடரின் முதல் 3 போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசிய அவருக்கு நேற்றைய தினம் தொடையில் மீண்டும் வலி ஏற்பட்டதையடுத்து அவர் 3 ஓவர்களை மட்டுமே போட்டுவிட்டு மைதானத்தைவிட்டு வெளியேறினார்,

விரைவில் குணமாகும் என நம்பிக்கை

விரைவில் குணமாகும் என நம்பிக்கை

இந்நிலையில் கடந்த ஐபிஎல்லின்போது காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பெரிய அளவிலான போராட்டத்திற்கு பிறகே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையில் அணியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சிறிய காயம் என்றும் விரைவில் சரியாகிவிடும் என்றும் அவர் கூறயுள்ளார்.

அணியில் இணைந்த வில்லியம்சன்

அணியில் இணைந்த வில்லியம்சன்

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த போட்டிகளில்பங்கேற்காத எஸ்ஆர்எச் வீரர் கேன் வில்லியம்சன் தற்போது ஓரளவிற்கு குணம் கண்டு நேற்றைய பாட்டியில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனிடையே அணியின் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியில் சென்று ஸ்கேன் எடுப்பது பயோ பபுள் விதிமுறைக்கு மாறானது என்பதால் ஸ்கேன் எடுக்கப்படவில்லை என்றும் ஆனால் விரைவில் எடுப்பார் என்றும் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்,

சரியாகியுள்ளதாக பாண்டிங் தகவல்

சரியாகியுள்ளதாக பாண்டிங் தகவல்

இதனிடையே சிஎஸ்கே வீரர் மொயீன் அலியும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் இஷாந்த் சர்மாவின் குதிகால் வலி தற்போது சரியாகியுள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோச் ரிக்கி பாண்டிங் தகவல் தெரிவித்துள்ளார். அவர் அணியில் இணையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 22, 2021, 15:38 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
Ishant was struggling with a heel niggle, but he is good to go now -Ricky Ponting
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X