இப்படி ஒன்னு இருக்கோ.. ரிஷப் பண்ட்-ன் சதம் தான் இந்தியா தோற்பதற்கான காரணமாக இருக்குமா?? - வரலாறு இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் அதற்கு ரிஷப் பண்ட்-ன் சதமும் காரணமாகலாம் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இரு அணிகளும் மோதிய 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் சொதப்பியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பின்னர் 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 245 ரன்களுக்கெல்லாம் ஆட்டமிழந்து ஏமாற்றியது.

இது ஜார்வோ 2.0 - இந்தியா, இங்கிலாந்து டெஸ்டில் சம்பவம்.. பதறி போய் நடவடிக்கை எடுத்த போலீஸ்இது ஜார்வோ 2.0 - இந்தியா, இங்கிலாந்து டெஸ்டில் சம்பவம்.. பதறி போய் நடவடிக்கை எடுத்த போலீஸ்

தோல்வி பாதை

தோல்வி பாதை

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 4 மற்றும் 5வது நாட்களில் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாக இருக்கும் எனத்தெரிகிறது. எனினும் அதற்கேற்றார் போல அதிக ஸ்கோரை அடிக்க இந்திய அணி தவறிவிட்டது. இதனால் 378 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடி காட்டி வருகிறது. 4வது நாள் ஆட்டநேர முடிவு வரை அந்த அணி 259 - 3 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.

பண்ட் மீதான விமர்சனம்

பண்ட் மீதான விமர்சனம்

இந்நிலையில் இந்திய அணியின் இந்த சரிவுக்கு ரிஷப் பண்ட்-ன் சதமும் ஒருவகையில் காரணம் என்பது போல ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி ஸ்கோர் உயர்வதற்கு ரிஷப் பண்ட் அடித்த 146 ரன்கள் தான் முக்கிய காரணம். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 5வது சதம் இதுவாகும்.

என்ன காரணம்

என்ன காரணம்

அவரின் 5 சதங்களில் 4 சதங்கள் SENA ( தென்னாப்பிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் அடித்தவை ஆகும். இதில் 3 போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. 2 போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிவடைந்தது. தற்போது அடித்துள்ள 4வது சதத்திலும், தோல்வியை நோக்கி செல்வதால் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

2018 ஓவல் - தோல்வி

2019 SCG - தோல்வி

2022 நியூலாந்து - டிரா

2022 - ?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Interesting fact about India's test Results when Rishabh pant scored hundred
Story first published: Tuesday, July 5, 2022, 11:34 [IST]
Other articles published on Jul 5, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X