தோனியை மிஞ்சக்கூடிய வீரர் அவர்....ஒருவரை மட்டும் குறிப்பிட்டு பாராட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்

புனே: ரிஷப் பண்ட், ஒரு விஷயத்தில் எம்.எஸ்.தோனியையே மிஞ்சி விடுவார் என முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி... ஷிகர் 98 ரன்கள்... பிரசித் 4 விக்கெட்கள்!

இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் அக் புகழாரம் தெரிவித்துள்ளார்.

கம்பேக்

கம்பேக்

இளம் வீரர் ரிஷப் பண்ட் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைந்தார். அன்று முதல் இங்கிலாந்து தொடர் வரை பேட்டிங்கில் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். இரு நாட்டு அணிகளுடனும் இவர் விளையாடிய ஆட்டத்தில் 4 அரை சதம் மற்றும் ஒரு சதத்தை விளாசினார்.

கீ ப்ளேயர்

கீ ப்ளேயர்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல ஸ்கோரை அடித்தாலும், கடைசி 10 ஓவர்களில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்த்திக் பாண்டியாவின் பங்கு மிக முக்கியமான ஒன்று. அதிரடியாக அடிய பண்ட் 40 பந்துகளில் 77 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் இந்திய அணி 336 ரன்கள் எடுக்க உதவியாக இருந்தது.

பாராட்டு

பாராட்டு

இதுகுறித்து பேசியுள்ள இன்சமாம் உல் அக், இந்திய அணிக்கு லோ ஆர்டரில் மிகப்பெரிய நம்பிக்கை அளிப்பது ரிஷப் பண்ட். நான் கடந்த 6 - 7 மாதங்களாக அவரது ஆட்டத்தை கவனித்து வருகிறேன். அவர் பேட்டிங் ஆடும் விதிம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எந்த பொஷிசனில் களமிறங்கினாலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

 ஜாம்பவான்கள்

ஜாம்பவான்கள்

ரிஷப் பண்ட்-ஐ போன்று தாக்கத்தை ஏற்படுத்த கூடிய திறமையை கடந்த 30 - 35 ஆண்டுகளில் 2 வீரர்களிடம் தான் பார்த்தேன். அவர்கள் தோனி மற்றும் கில் கிறிஸ்ட் ஆகும். இதே போன்ற ஆட்டத்தை ரிஷப் பண்ட் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தால் நிச்சயம் தோனி, கில் கிறிஸ்டை பின்னுக்கு தள்ளிவிடலாம் என இன்சமமாம் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Inzamam Praises Rishab pant for massive batting and compared with Dhoni, Gill Christ
Story first published: Sunday, March 28, 2021, 13:19 [IST]
Other articles published on Mar 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X