For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க டீமுக்காக ஆடலை.. இந்திய ஜாம்பவான் வீரர்களை குத்திக் காட்டிய பாக். கேப்டன்.. வெடித்த சர்ச்சை!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், தன் காலத்தில் ஆடிய இந்திய வீரர்கள் அணிக்காக ஆடாமல் தங்களுக்காக ஆடியதாக குறிப்பிட்டு சர்ச்சையாக பேசி உள்ளார்.

Recommended Video

Inzamam's controversiaI speech on Indian players that they played for themselves

சமீப காலத்தில் பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை அதிக முறை வீழ்த்த முடியவில்லை.

ஆனால், இன்சமாம் உல் ஹக் ஆடிய காலத்தில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை அதிக போட்டிகளில் வீழ்த்தி இருந்தது. அதுபற்றி பேசிய போது தான் சர்ச்சை கருத்துக்களை குறிப்பிட்டார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே ஆன மோதல் பல தலைமுறைகள் கடந்தது. உலகிலேயே அதிக மக்கள் பார்க்கும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடராகத்தான் இருக்கும். அந்த பரபரப்பு இரு அணி வீரர்கள் இடையேயும் இருக்கும்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

கடைசியாக இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 2019 உலகக்கோப்பை தொடரில் சந்தித்தது. அந்த மோதலில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. அது அந்த அணியின் மீது கடும் விமர்சனத்தை எழுப்பியது. அந்த அணியிலும் பல மாற்றங்களை கொண்டு வந்தது.

கடைசி வெற்றி

கடைசி வெற்றி

பாகிஸ்தான் அணி கடைசியாக இந்திய அணியை 2017 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் வீழ்த்தி இருந்தது. அது பெரிய வெற்றி என்றாலும், அதன் பின் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை தொடரில் தோல்விகளை மட்டுமே சந்தித்தது.

ரமீஸ் ராஜா - இன்சமாம் பேட்டி

ரமீஸ் ராஜா - இன்சமாம் பேட்டி

இது பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா ஒரு பேட்டியில், முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிடம் கேள்வி எழுப்பினார். அந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக சிறந்த ரெக்கார்டை வைத்திருந்தது.

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் வெற்றி

உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது, மற்ற இரு தரப்பு தொடர்களில் இரு அணிகளும் மாறி, மாறி வென்றுள்ளன. அதிலும், பாகிஸ்தான் அணி அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது.

இன்சமாம் கருத்து

இன்சமாம் கருத்து

அப்போது பாகிஸ்தான் அணியின் பலம் குறைவாக இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், இந்திய அணியை வீழ்த்தியது பாகிஸ்தான். அது பற்றி கருத்து தெரிவித்த இன்சமாம், அப்போது இருந்த பாகிஸ்தான் வீரர்கள் குறைவாகரன் அடித்தாலும் அணிக்காக ஆடினார்கள். இந்திய வீரர்கள் 100 ரன் அடித்தாலும், அவர்களுக்காகவே ஆடினார்கள் என் குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

"நாங்கள் இந்திய அணிக்கு எதிராக ஆடிய போது அவர்கள் பேட்டிங் எங்களை விட பலமாக இருப்பதாக கருதப்பட்டது. ஆனாலும், எங்கள் வீரர்கள் 30, 40 ரன்கள் எடுத்தார்கள். அது அணிக்காக எடுக்கப்பட்டது. ஆனால், இந்திய அணியில் அவர்கள் 100 ரன்கள் எடுத்தாலும், அவர்கள் தங்களுக்காக ஆடினார்கள். இதுதான் இரண்டு அணிகளுக்கும் இடையே இருந்த வித்தியாசம்" என்றார் இன்சமாம்.

அப்போது இருந்த இந்திய வீரர்கள்

அப்போது இருந்த இந்திய வீரர்கள்

இன்சமாம் உல் ஹக் ஆடிய காலத்தில் இந்திய அணியில் பெரும்பாலும் இடம் பெற்ற பேட்ஸ்மேன்கள் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்கள் தான். இன்சமாம் உல் ஹக் அவர்களை நேரடியாக தாக்கிப் பேசவில்லை என்றாலும், அவர் சொல்ல வருவது அவர்களைத் தானோ என தோன்றுகிறது.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

இன்சமாம் உல் ஹக் கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாகிஸ்தான் அணியின் பெருமையைக் குறிப்பிட அவர் இந்திய வீரர்களை குத்திக் காட்டி பேசி உள்ளார். இதற்கு இந்திய வீரர்கள் யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் இந்த சர்ச்சை பெரிதாக வெடிக்கக் கூடும்.

Story first published: Thursday, April 23, 2020, 15:35 [IST]
Other articles published on Apr 23, 2020
English summary
Inzamam Ul Haq says Indian players played for themselves, while Pakistan players scored less, but it was for team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X