For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

17 சிக்ஸ்.. 66 பந்தில் 175 ரன்.. சம்பவம் செய்த யுனிவெர்சல் பாஸ்.. மிரண்டு போன கிரிக்கெட் உலகம்!

பெங்களூர் : அது 2013ஆம் ஆண்டு. ஏப்ரல் 23ஆம் தேதி பெங்களூருவில் நடந்த அந்த ஐபிஎல் போட்டியில் தான் தரமான சம்பவம் செய்தார் யுனிவெர்சல் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெயில்.

Recommended Video

IPL- ன் மறக்க முடியாத போட்டி... கெயிலின் அதிரடி ஆட்டம்

அந்தப் போட்டியில் 17 சிக்ஸர்கள் விளாசி தாண்டவம் ஆடினார் கெயில். இன்று வரை கிரிக்கெட்டில் முறியடிக்க முடியாத இரண்டு சாதனையை செய்தார்.

அந்த சாதனை ஐபிஎல் மட்டுமல்லாது சர்வதேச போட்டிகளிலும், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் யாரும் தொட முடியாத சாதனையாக உள்ளது.

7 வயசுதான்.. என்னா ஒரு டைமிங்.. எப்படிப்பட்ட புட் ஒர்க்.. யாரு சாமி இது!7 வயசுதான்.. என்னா ஒரு டைமிங்.. எப்படிப்பட்ட புட் ஒர்க்.. யாரு சாமி இது!

கனவு பேட்டிங் அணி

கனவு பேட்டிங் அணி

2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு பேட்டிங் அணியாக இருந்தது. காரணம், ஒரே அணியில் அதிரடி சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில், மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகிய மூவரும் இடம் பெற்று இருந்தனர்.

தன்னம்பிக்கை ஆட்டம்

தன்னம்பிக்கை ஆட்டம்

கிறிஸ் கெயில் துவக்கத்தில் அடித்து ஆடி, தன்னம்பிக்கை பெற்றுவிட்டால் பெரிய ஸ்கோரை நோக்கி செல்வார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படித் தான் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ஆடத் துவங்கினார் கிறிஸ் கெயில்.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

முதல் ஓவரில் நிதானமாக துவக்கிய அவர், இரண்டாவது ஓவரில் ஈஷ்வர் பாண்டே என்ற அனுபவம் இல்லாத வீரரின் பந்துவீச்சில் ரிஸ்க் எடுக்காமல் பந்தை தட்ட, நான்கு ஃபோர் கிடைத்தது. அடுத்து ஐந்தாவது ஓவரில் மிட்செல் மார்ஷ் பந்து வீசினார். அந்த ஓவரில் 4 சிக்ஸ், 1 ஃபோர் அடித்தார்.

ஆரோன் பின்ச் மோசமான முடிவு

ஆரோன் பின்ச் மோசமான முடிவு

தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய கிறிஸ் கெயிலை வெளியேற்ற ஆரோன் பின்ச் ஒரு மோசமான முடிவை எடுத்தார். தானே பந்துவீசலாம் என முடிவு செய்தார். அந்த ஓவரிலும் 4 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து 29 ரன்கள் குவித்தார் கெயில்.

அதிவேக சதம்

அதிவேக சதம்

தன் 30வது பந்தில் ஒரு இமாலய சிக்ஸ் அடித்து சதம் கடந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அதுதான். அது மட்டுமின்றி அனைத்து வித டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளிலும் அதுவே அதிவேக சதம். இன்று வரை அதை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

30 பந்துகளில் சதம் எப்படி?

30 பந்துகளில் சதம் எப்படி?

அந்த 30 பந்துகளில் அவர் எடுத்த ரன்களை இப்படி வகைப்படுத்தலாம். 7 டாட் பால், 4 ஒற்றை ரன்கள், 8 ஃபோர், 11 சிக்ஸர்கள். அன்று அத்துடன் நிற்கவில்லை கிறிஸ் கெயில். அதன் பின்னரும் தன் அதிரடியை தொடர்ந்தார். எனினும், வேகம் லேசாக சரிந்தது.

17 சிக்ஸர்கள் அடித்தார்

17 சிக்ஸர்கள் அடித்தார்

கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார் கிறிஸ் கெயில். அதில் 17 சிக்ஸர்கள் அடக்கம். கடைசி நேரத்தில் கிறிஸ் கெயில் வேகம் குறைவதை அறிந்த டி வில்லியர்ஸ் அதை ஈடுகட்ட அதிரடி ஆட்டம் ஆடினார்.

டி வில்லியர்ஸ் அதிரடி

டி வில்லியர்ஸ் அதிரடி

8 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அன்று கிறிஸ் கெயிலின் மெகா விருந்துக்கு நடுவே, தனியாக ஒரு மினி விருந்து வைத்தார் டி வில்லியர்ஸ். அவர் 3 சிக்ஸ், 3 ஃபோர் அடித்து இருந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 263 ரன்கள் குவித்தது. புனே வாரியர்ஸ் அணி வெறும் 133 ரன்கள் குவித்து படுதோல்வி அடைந்தது.

சாதனைகள்

சாதனைகள்

டி20 வரலாற்றில் மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். அதே போல கிறிஸ் கெயில் மிகப் பெரிய டி20 ஸ்கோர் மற்றும் அதிவேக டி20 சதம் அடித்த வீரர் என இரண்டு சாதனைகளை செய்தார். அது இரண்டும் இன்றளவும் முறியடிக்கப்படவில்லை.

யாராலும் தொட முடியவில்லை

யாராலும் தொட முடியவில்லை

ஒருமுறை ஆரோன் பின்ச் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 172 ரன்கள் எடுத்தார். ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்துள்ளார். ஆனால், யாராலும் கெயிலின் அதிவேக சதம் மற்றும் டி20யில் அதிகபட்ச ஸ்கோர் ஆகிய இரண்டு சாதனைகளை தொட முடியவில்லை.

Story first published: Thursday, April 23, 2020, 18:14 [IST]
Other articles published on Apr 23, 2020
English summary
IPL 2013 : Chris Gayle stormed with a 66 ball 175 including 17 sixes. He also hit fastest century in cricket history with just 30 balls.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X