For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது முறையாக பைனலில் மோதல்... மும்பையுடன் மல்லுக்கட்டும் சென்னை!

கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்றோடு சேர்த்து 3வது முறையாக சந்திக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா ஒருமுறை வென்றுள்ளன.

இன்று இரவு நடைபெறும் 8வது ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரசிகர்கள் தயாராகி விட்டனர். வீரர்களும் தயாராகி விட்டனர். கண்டு களிக்க கண்கள் தயாராகி விட்டன.

இந்த இறுதிப் போட்டி குறித்தும், இரு அணிகள் குறித்தும் சில சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு....

3வது முறையாக

3வது முறையாக

சென்னையும், மும்பையும் இறுதிப் போட்டியில் மோதுவது இது மூன்றாவது முறையாகும். முந்தைய இரு போட்டிகளில், தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வென்றுள்ளன.

புதிய சாதனை படைக்கலாம்

புதிய சாதனை படைக்கலாம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே 2 முறை கோப்பையை வென்றுள்ளது. இன்று வென்றால் 3வது முறை கோப்பை கைக்கு வரும். இதுவரை யாரும் 3 முறை கோப்பையை வென்றதில்லை என்பதால் இது சாதனையாகும்.

6வது இறுதிப் போட்டி

6வது இறுதிப் போட்டி

6வது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது சென்னை. இது ஒரு சாதனையாகும். இதுவரை எந்த அணியும் இப்படி அதிக அளவிலான இறுதிப் போட்டிகளுக்கு வந்ததில்லை.

ஒரே கேப்டன்

ஒரே கேப்டன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே ஒரே கேப்டனின் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் டோணி தலைமையில்தான் அந்த அணி ஆடியுள்ளது.

2வது முறையாக ஈடன் கார்டனில்

2வது முறையாக ஈடன் கார்டனில்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2வது முறையாக இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு 2013ல் நடந்தது. அப்போதும் சென்னையும், மும்பையும்தான் அதில் மோதின.

ரிக்கிக்கும் பெருமை கிடைக்கும்

ரிக்கிக்கும் பெருமை கிடைக்கும்

கடந்த 2013ல் நடந்த போட்டியின்போது மும்பை அணியின் வீரராக இடம் பெற்றிருந்தார் ரிக்கி பான்டிங். தற்போது பயிற்சியாளராக இருக்கிறார்.

அன்று மும்பையில்.. இன்று சென்னையில்

அன்று மும்பையில்.. இன்று சென்னையில்

மேற்கு இந்திய அணிகள் வீரர் ஸ்மித், 2013 இறுதிப் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியிருந்தார். தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஆடுவது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு இதுவும் சாதனையே

சென்னைக்கு இதுவும் சாதனையே

லீக் சுற்றில் முதலிடத்தைப் பிடித்ததோடு, கோப்பையையும் வென்ற அணி என்ற பெருமை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மட்டுமே உண்டு. தற்போது சென்னை வென்றால் அச்சாதனையை அதுவும் புரியும்.

மும்பை வென்றால்

மும்பை வென்றால்

சென்னை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டுமே இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ளன. இன்று மும்பை வென்றால் அவர்களுடன் இதுவும் இணையும்.

ஜெயிச்சா 15.. தோத்தா 10

ஜெயிச்சா 15.. தோத்தா 10

இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ. 15 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு ரூ 10 கோடி கிடைக்கும்.

மழை வந்து கெடுத்தா

மழை வந்து கெடுத்தா

இன்றைய போட்டியின்போது மழை வந்து போட்டியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டு, ரிசர்வ் டேயான 25ம் தேதி போட்டி நடந்து, அப்போதும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படும். காரணம், அது லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்றிருப்பதால்.

Story first published: Sunday, May 24, 2015, 16:52 [IST]
Other articles published on May 24, 2015
English summary
Chennai Super Kings (CSK) and Mumbai Indians (MI) will battle it out for the title in the final of the 8th edition of the Indian Premier League (IPL 8) here at Eden Gardens today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X