For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நொந்து நூடுல்சாகி போன பஞ்சாப்பை பஞ்சராக்குமா கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ்?

By Veera Kumar

பெங்களூரு: ஐ.பி.எல். போட்டியின் 40-வது 'லீக்' ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் இதில் மோதுகின்றன.

பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் இருக்க வெற்றி பெற வேண்டிய நிலை பெங்களூர் அணிக்கு உள்ளது. கடந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னையிடம் தோற்றது. இந்த ஆட்டத்தில் இடம் பெறாத கிறிஸ்கெய்ல் இன்று ஆடுவார் என்று தெரிகிறது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. தொடர் தோல்விக்கு அந்த அணி இன்றாவது முற்றுப்புள்ளி வைக்குமா? என்று அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எங்கே, எப்போது?

எங்கே, எப்போது?

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில், மே 6ம் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்தியாவில் எந்த சேனல்கள்?

இந்தியாவில் எந்த சேனல்கள்?

சோனி கிக்ஸ் சேனலில் தமிழ் மற்றும் தெலுங்கிலும், சோனி ஆத் சேனலில் வங்க மொழியிலும், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தியிலும், சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலத்திலும் கிரிக்கெட் நேரடி வர்ணனையை கேட்கலாம்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

பெங்களூரு அணி-விராட் கோஹ்லி, கிறிஸ் கெய்ல், மிட்சேல் ஸ்டார்க், டி வில்லியர்ஸ். கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சேவாக், மேக்ஸ்வெல், டேவிட் மில்லர்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகளில் பஞ்சாப் 9லும், பெஙக்ளூரு, 5 போட்டிகளிலும் வென்றுள்ளது. வரலாறு, பஞ்சாப்புக்கு ஆதரவாக உள்ளது.

நடப்பு நிலவரம்

நடப்பு நிலவரம்

4 வெற்றிகள், 4 தோல்விகளுடன் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்திலுள்ளது. 1 போட்டியில் ரிசல்ட் கிடைக்கவில்லை. பஞ்சாப் அணி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் பரிதாபமாக 8வது இடத்திலுள்ளது.

Story first published: Wednesday, May 6, 2015, 19:54 [IST]
Other articles published on May 6, 2015
English summary
Two-time runners-up Royal Challengers Bangalore (RCB) will take on the Kings XI Punjab (KXIP) in the 40th match of the Indian Premier League 2015 (IPL 8) at the M Chinnaswamy Stadium here tonight.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X