For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2015: பதுங்கும் ராஜஸ்தானும், பாயும் பெங்களூரும் இன்று மோதல்!

By Veera Kumar

பெங்களூரில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.

5வெற்றிகளுடன் ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்தாலும், அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது ராஜஸ்தான். முதலில் தடுமாறிய பெங்களூர் அணி தற்போது மிரட்ட தொடங்கியுள்ளதன் அறிகுறி அந்த போட்டி.

அதனால் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு ராஜஸ்தான் பதிலடி கொடுக்குமா அல்லது பெங்களூர் அணியே ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெங்களூர் அணி தனது சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

பதுங்கும் ராஜஸ்தான்

பதுங்கும் ராஜஸ்தான்

தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்த ராஜஸ்தான், அடுத்த இரு ஆட்டங்களில் தோல்வி கண்டது. மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. எனவே இந்த ஆட்டத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ரஹானே, ஸ்மித்

ரஹானே, ஸ்மித்

ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் அஜிங்க்ய ரஹானேவும், பார்மில் இருக்கும் ஸ்டீவன் ஸ்மித்தும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அந்த அணி நல்ல ஸ்கோரை குவிக்க வாய்ப்புள்ளது. ரஹானே 323 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர்கள் தவிர கேப்டன் வாட்சன், தீபக் ஹூடா, ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் பாக்னர் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து

வேகப்பந்து

வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ், ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி, வாட்சன் ஆகியோரை நம்பியுள்ளது ராஜஸ்தான். சுழற்பந்து வீச்சில் பிரவீண் தாம்பே நம்பிக்கையளிக்கிறார்.

பெங்களூரு நம்பிக்கை

பெங்களூரு நம்பிக்கை

இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 3ல் வெற்றி கண்டுள்ளது. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட பெங்களூர் இந்த ஆட்டத்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என்று தெரிகிறது.

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

பெங்களூர் அணியில் கிறிஸ் கெயில், கேப்டன் கோஹ்லி, டிவில்லியர்ஸ், உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். மிட்செல் ஸ்டார்க்கின் வருகைக்குப் பிறகு பெங்களூர் அணியின் பந்துவீச்சு பலம் பெற்றுள்ளது. டெல்லி அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்த ஸ்டார்க், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருப்பார் என நம்பலாம்.

எங்கே எப்போது?

எங்கே எப்போது?

போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

சோனி கிக்ஸ் சேனலில், தமிழ், தெலுங்கு, சோனி ஆத் சேனலில் வங்காளம், சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலம், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தியிலும் கமெண்டரியுடன், நேரடி ஒளிபரப்பை காணலாம்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி, தலா 7 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

Story first published: Wednesday, April 29, 2015, 15:10 [IST]
Other articles published on Apr 29, 2015
English summary
Royal Challengers Bangalore (RCB) are high on confidence after two successive wins and will be aiming to complete a hat-trick as they host Rajasthan Royals (RR) in tonight's Match 29 of Indian Premier League 2015 (IPL 8) at M Chinnaswamy Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X