For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2015: ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று பலப் பரி்ட்சை! கலக்குவாரா கிளன் மேக்ஸ்வெல்?

By Veera Kumar

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 8 ஆட்டங்களிலும், பஞ்சாப் 5 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

பஞ்சாப் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. அந்த அணியின் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களாக, வீரேந்திர சேவாக்கும், முரளி விஜயும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முரளி விஜய் கடந்த 7 ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியுள்ளார். சேவாக் சிறப்பாக ஆட ஆரம்பித்துவிட்டால், அவரை மட்டுப்படுத்த முடியாது. இந்த ஜோடி பஞ்சாப் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

மிடில் ஆர்டரில் வோரா, ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி, தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா ஆகியோர் களம் காணுவார்கள். இவர்களில் யாராவது ஒருவர் களத்தில் நிலைத்து நின்றுவிட்டாலும் ராஜஸ்தான் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறும்.

கடந்த ஐபிஎல் தொடரில் 552 ரன்கள் குவித்தவர் மேக்ஸ்வெல், இந்த முறையும் ரசிகர்களுக்கு விருந்துபடைப்பார் என்று கூறுகின்றனர் பஞ்சாப் ரசிகர்கள்.

ஜான்சன் வேகம்

ஜான்சன் வேகம்

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் மிட்செல் ஜான்சன், சந்தீப் சர்மா ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேல், ரிஷி தவன் அல்லது ஷ்ரதுல் தாக்குல் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் கிரவுண்டு புனே

ராஜஸ்தான் கிரவுண்டு புனே

பிசிசிஐ-ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் இடையிலான பிரச்சினை காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ‘ஹோம் கிரவுண்ட்' ஜெய்ப்பூரிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர் ஆகியோர் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரஹானே, இப்போது உலகக் கோப்பை உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி திரும்பியுள்ளதால், இந்த முறை அவர் இன்னும் சிறப்பாக ஆடுவார் என நம்பலாம்.

பலே ஆல் ரவுண்டர்கள்

பலே ஆல் ரவுண்டர்கள்

மிடில் ஆர்டரில் ஸ்டீவன் ஸ்மித், சஞ்ஜூ சாம்சன், கேப்டன் வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் வாட்சன், பின்னி, ஃபாக்னர் ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் என்பது அந்த அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கிறிஸ் மோரிஸ், ரஜத் பாட்டியா, தவல் குல்கர்னி, ஃபாக்னர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. கிறிஸ் மோரிஸ் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சிறப்பாக ஆடிவிட்டு, அதே ஃபார்மில் பாரதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

பஞ்சாப் அணி விவரம்

பஞ்சாப் அணி விவரம்

ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), அக் ஷர் படேல், அனுரீத் சிங், பியூரான் ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், கிளன் மேக்ஸ்வெல், குருகீரத் சிங், கரன்வீர் சிங், மனன் வோரா, மிட்செல் ஜான்சன், பர்விந்தர் அவானா, ரிஷி தவன், சந்தீப் சர்மா, ஷ்ரதுல் தாக்குர், ஷான் மார்ஷ், சிவம் சர்மா, திசாரா பெரேரா, சேவாக், விருத்திமான் சாஹா, முரளி விஜய், நிகில் நாயக், யோகேஷ் கோல்வால்கர்.

ராஜஸ்தான் அணி விவரம்

ராஜஸ்தான் அணி விவரம்

ஷேன் வாட்சன் (கேப்டன்), அபிஷேக் நாயர், அஜிங்க்ய ரஹானே, அங்கித் சர்மா, பென் கட்டிங், தீபக் ஹூடா, குல்கர்னி, திஷந்த் யாக்னிக், ஜேம்ஸ் ஃபாக்னர், கேன் ரிச்சர்ட்ஸன், கருண் நாயர், பிரவீண் டாம்பே, ராகுல் திவேதியா, ரஜத் பாட்டியா, சஞ்ஜூ சாம்சன், ஸ்மித், ஸ்டூவர்ட் பின்னி, டிம் சவுதி, விக்ரம்ஜித் மாலிக், கிறிஸ் மோரிஸ், ஜுவான் தேரான், பரீந்தர் சிங், தினேஷ் சலுங்கே, திரிவேதி, பிரதீப் சாஹு.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை, சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ், சோனி கிக்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன

Story first published: Friday, April 10, 2015, 13:09 [IST]
Other articles published on Apr 10, 2015
English summary
Rajasthan Royals would look to adapt quickly to their new 'home ground' when they lock horns with last season's runner-up Kings XI Punjab in their campaign opener in the IPL here Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X