For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோவை கல்லூரி மைதானத்தில் 4 ஐபிஎல் போட்டிகள்! வாங்க.. வாங்க.. எல்லோருக்கும் இலவசம்!

By Veera Kumar

கோவை: இவ்வார இறுதியில், 4 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை, கோவை நகரில் பிரமாண்ட திரை மூலம் காண்பிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டை வளர்ந்துவரும் இரண்டாம் கட்ட நகரங்களிலும் பிரபலப்படுத்த பிசிசிஐ முயன்று வருகிறது. அதந் ஒரு பகுதியாக, பொது இடங்களில் பிரமாண்ட திரையை வைத்து, இலவசமாக கிரிக்கெட்டை நேரடி ஒளிபரப்பு செய்கிறது பிசிசிஐ. இந்த திட்டத்திற்கு ஃபேன் பார்க் என்று பெயர் சூட்டியுள்ளது பிசிசிஐ.

ஏற்கனவே, ஆக்ரா மற்றும் நாக்பூர் நகரங்களில் ஃபேன் பார்க் திட்டத்தின் மூலம் திரையிடப்பட்டு, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

கோவை, டேராடூன்

கோவை, டேராடூன்

இந்த வார இறுதியான, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கோவை மற்றும் டேராடூன் நகரங்களில் ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்பட உள்ளது.

பஞ்சாப், கொல்கத்தா

பஞ்சாப், கொல்கத்தா

இதுகுறித்து, பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி நடுவேயான போட்டியும், இரவு 8 மணிக்கு பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியும் நடக்கிறது.

சிஎஸ்கே சிங்கங்கள்

சிஎஸ்கே சிங்கங்கள்

19ம் தேதியில், மாலை 4 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியும், இரவு 8 மணிக்கு மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டியும் நடக்கிறது. இந்த போட்டிகள், கோவை, எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஸ்கிரீனில் காட்டப்படும்.

முதலில் வருவோருக்கே சீட்

முதலில் வருவோருக்கே சீட்

இரு நாட்களிலும், 2 மணி முதல் கிரவுண்ட் திறக்கப்படும். முதலில் வந்தோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், சீட்டுகள் தரப்படும். இது முற்றிலும் இலவசம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. டேராடூனில் டாக்டர் அம்பேத்கர் கிரவுண்டில் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Story first published: Tuesday, April 14, 2015, 17:22 [IST]
Other articles published on Apr 14, 2015
English summary
After a successful beginning to the Pepsi IPL Fan Park at Agra and Nagpur, the weekend carnival moves to its next destinations, Dehradun and Coimbatore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X