For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளாஸ்டர் ஒட்டிய பொல்லார்டை சும்மா விட்டிருக்க கூடாது: கவாஸ்கர் கொந்தளிப்பு

By Veera Kumar

டெல்லி: வாயில் டேப் ஒட்டிய கெய்ரன் பொல்லார்டை குறைந்தது ஒன்றிரெண்டு போட்டிகளிலாவது விளையாட தடை செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் கூறிய இதே போன்ற கருத்துக்கு ஆதரவு தெரிவதி்து கவாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே கடந்த 19ம்தேதி போட்டி நடைபெற்றது.

நடுவர் கண்டிப்பு

நடுவர் கண்டிப்பு

பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்தபோது, அவரின் அருகே சென்று, வம்பிழுத்தார் மும்பை வீரர் பொல்லார்ட். இதையடுத்து நடுவர் கண்டித்து அனுப்பி வைத்தார்.

பிளாஸ்டர் பொல்லார்ட்

பிளாஸ்டர் பொல்லார்ட்

நடுவரின் உத்தரவை கேலி செய்யும்விதமாக, பொல்லார்ட் தனது வாயில் செல்லோ டேப்பை போட்டு ஒட்டிக்கொண்டு மைதானத்திற்குள் திரிந்தார்.

ஹர்பஜன் ஆதரவு

ஹர்பஜன் ஆதரவு

இந்த சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம் என்று மும்பை வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சிலர் கூறியிருந்தாலும், மாஜி வீரர்களோ, பொல்லார்டின் செயல் கண்டிக்கத்தக்கது என்கின்றனர்.

நேற்று டெல்லியுடன்

நேற்று டெல்லியுடன்

நேற்று மும்பை இந்தியன்ஸ்-டெல்லி அணிகள் நடுவே போட்டி நடந்தது. அப்போது, சோனி மேக்ஸ் டிவியின் கமெண்டரி அறையில் இருந்த சுனில் கவாஸ்கரிடம் பேசிய நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல், பொல்லார்டை ஒன்றிரெண்ட்டு போட்டியிலாவது தடை செய்திருக்க வேண்டும் என்றார்.

தடை செய்திருக்கனும்

தடை செய்திருக்கனும்

இதுகுறித்து கவாஸ்கரிடம் கருத்து கேட்டபோது, சைமன் கருத்தில் தான் முற்றிலும் உன்படுவதாக கூறினார். நடுவரின் முடிவை கேலிக் கூத்தாக்கிவிட்டார் பொல்லார்ட். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாம், இதுகுறித்து பொல்லார்டுக்கு அறிவுறுத்த வவேண்டும் என்றும் கவாஸ்கர் கூறினார்.

Story first published: Friday, April 24, 2015, 9:53 [IST]
Other articles published on Apr 24, 2015
English summary
Former India captain Sunil Gavaskar feels Mumbai Indians (MI) all-rounder Kieron Pollard should have been banned for 1 or 2 matches for his taped mouth act against Royal Challengers Bangalore (RCB) during the Indian Premier League 2015 (IPL 8).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X