For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னரின் அதிரடியால் வீழ்ந்தது பஞ்சாப்... 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்...

By Sakthi

ஐதராபாத்: டேவிட் வாா்னா் அதரடி விளாசலால் 5 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சன் ரைசா்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத்...

டாஸ் வென்ற ஐதராபாத்...

பஞ்சாப் அணியை ஐதராபாத் அணி தனது சொந்த மண்ணில் எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் அதிரடியாக ஆடினர்.

நங்கூரமாய் நின்ற வாா்னா்

நங்கூரமாய் நின்ற வாா்னா்

24 ரன்களில் ஷிகர் தவான் வெளியேற மறு முனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய வார்னர் பஞ்சாப் வீரர்களின் பந்து வீச்சை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும், விளாசினார்.

அதிரடி காட்டிய ஹென்ரிக்ஸ்

அதிரடி காட்டிய ஹென்ரிக்ஸ்

வாா்னருக்கு ஜோடியாக ஹென்ரிக்சும் அதிரடி காட்ட ஐதராபாத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 28 ரன்களில் விக்கெட்டை இழந்து ஹென்ரிக்ஸ் வெளியேறினாா்.

பஞ்சாபின் வியூகம் பலிக்கவில்லை

பஞ்சாபின் வியூகம் பலிக்கவில்லை

ஹென்ரிக்ஸ் வெளியேற, வார்னருடன் மோர்கன் இணைந்தார். தன் பங்குக்கு 7 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து மோர்கன் பவிலியன் திரும்ப, வார்னர் விக்கெட்டை வீழ்த்த பஞ்சாப் வீரர்கள் வகுத்த வியூகம் பலிக்கவில்லை.

81 ரன்கள் விளாசிய வாா்னா்

81 ரன்கள் விளாசிய வாா்னா்

ஒரு கட்டத்தில் 52 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த திருப்தியுடன் வார்னர் ஹென்ட்ரிக்ஸ் பந்தில் குர் கீரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

5 விக்கெட்டுகளுக்கு 185 ரன்கள்

5 விக்கெட்டுகளுக்கு 185 ரன்கள்

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பவிலியன் திரும்ப, 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.

தொடக்கமே ஆட்டம் கண்ட பஞ்சாப்

தொடக்கமே ஆட்டம் கண்ட பஞ்சாப்

இதையடுத்து 186 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள், முரளி விஜய், 24 ரன்களிலும், வோரா 20 ரன்களிலும் வெளியேற விருத்திமான் சாகா 5 ரன்களிலும், மேகஸ்வெல் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கில்லராக மாறிய மில்லா்

கில்லராக மாறிய மில்லா்

ஆனால் அடுத்து மில்லர் களம் இறங்கியவுடன் ஆட்டத்தில் அனல் பறந்து விறுவிறுப்பைக் கூட்டியது.மில்லருக்கு ஈடுகொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் அளவிற்கு மற்ற வீரர்கள் விளையாடாமல் வந்த வேகத்தில் பவிலியன் திரும்பினர்.

வீணாகிய ரன் குவிப்பு

வீணாகிய ரன் குவிப்பு

பரபரப்பான இறுதி கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 180 ரன்கள் சேர்த்தது. மில்லர் 44 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ரன் குவிப்பு வீணானது.

5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதன் மூலம் ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 81 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்ட டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Tuesday, May 12, 2015, 9:53 [IST]
Other articles published on May 12, 2015
English summary
Stunning performence By David warner Hydrabad Win Over Punjab By 5 Runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X