For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பொறுத்தது போதும் பொங்கியெழுங்கள்.. சென்னை பேட்ஸ்மேன்களுக்கு பிளெமிங் 'கட்டளை'!

By Veera Kumar

ராஞ்சி: சென்னை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தயாராக வேண்டும், நமக்கு நேரம் போதிய அளவில் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.

குவாலிஃபையர் 1 ரவுண்டில் மும்பையிடம் தோற்ற சென்னை அணி, குவாலிஃபையர்2ல் இன்று, பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

டுபிளெசிஸ் தேற வேண்டும்

டுபிளெசிஸ் தேற வேண்டும்

இந்நிலையில் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: ஃபாப் டுப்ளெசிஸ் அதிகப்படியான பந்துகளை சந்தித்து ரன் சேகரிக்கிறார் என்று நான் குறை சொல்லவில்லை. ஆனால், நேரம் கெட்ட நேரத்தில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்துவருகிறார். இந்த நிலையை அவர் மாற்ற வேண்டும்.

அதிக விக்கெட் விழுகிறது

அதிக விக்கெட் விழுகிறது

கடந்த கால ஐபிஎல் சீசன்களை ஒப்பிட்டால் இம்முறை சென்னை அணி அதிகப்படியான விக்கெட்டுகளை இழந்துள்ளது. எனவே பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இந்த ஐபிஎல் சீசனில் குறைந்துள்ளதை மறுக்க முடியாது. இந்த குறையை நீக்கி பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

டாப்பில் டண்டனக்கா

டாப்பில் டண்டனக்கா

டாப்-ஆர்டரிலுள்ள நாலைந்து பேட்ஸ்மேன்களாவது கணிசமாக ரன் அடிக்க வேண்டும். கடந்த காலங்களில் சென்னை அப்படித்தான் செய்தது. இம்முறை அது நமக்கு மிஸ்சிங். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை சென்னை மிகவும் எதிர்பார்க்கிறது.

நேரம் இல்லை மக்களே

நேரம் இல்லை மக்களே

இந்த குறையை நிவர்த்தி செய்ய இன்றைய மற்றும் ஞாயிற்றுக்கிழமை போட்டி உதவும் என்று நம்புகிறேன். நம்மிடம் திறமையான டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால், இதுவரை கூட்டாக அனைவரும் ஆட்டத்திறனை காண்பிக்கவில்லை. சென்னை மைதானம், பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால், பேட்ஸ்மேன்கள் தங்கள் வழக்கமான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர நேரம் பிடித்து வருகிறது. ஆனால் தற்போது நமக்கு நேரம் இல்லை. நேரம் ஓடிக்கொண்டுள்ளது. உடனடியாக பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை காண்பிக்க வேண்டும். இவ்வாறு பிளெமிங் கூறினார்.

தலயே தகிடுதத்தோம்

தலயே தகிடுதத்தோம்

பேட்டிங்கை பொறுத்தளவில் கேப்டன் டோணியும் சொல்லிக்கொள்ளும்படி சாதிக்கவில்லை. அவர் 15 போட்டிகளில் 328 ரன்களை மட்டும் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 124.71 ஆகும். மும்பைக்கு எதிராக முதல் பந்தில் அவர் டக்-அவுட் ஆனது போட்டியை புரட்டிப்போட்டுவிட்டது. 400 ரன்களுக்கு மேல் குவித்திருந்த மெக்கல்லம் நியூசிலாந்துக்காக ஆட சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 22, 2015, 12:24 [IST]
Other articles published on May 22, 2015
English summary
Ahead of Qualifier 2 on Friday, Chennai Super Kings coach Stephen Fleming has asked his batters to pull up their socks, saying that the team is running out of time. He had a strong message for Faf du Plessis, who’s throwing away his starts.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X