For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னத்த தின்னாரோ தெரியல, இந்த ஹர்பஜன் சிங்கிற்கு கிறுக்கு புடிச்சிருக்கு போல...சேவாக் அடித்த கமெண்ட்

By Veera Kumar

மும்பை: சர்தார் இன்னிக்கு பைத்தியக்காரனாகிவிட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்பஜன் சிங்கை, பஞ்சாப் வீரர் வீரேந்திர சேவாக் கமெண்ட் அடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, பஞ்சாப் எளிதாக வெல்லும் சூழல் இருந்தது. ஆனால், மும்பை அணியின் ஹர்பஜன்சிங், 24 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரிகள் மூலம் 64 ரன்களை குவித்தார்.

பஞ்சாப் திரில் வெற்றி

பஞ்சாப் திரில் வெற்றி

இதனால் பஞ்சாப் கூடாரத்தில் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் கடைசி ஓவரில் 30 ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், மும்பை 12 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. எனவே, பஞ்சாப் வெற்றி பெற்றது.

கிறுக்கு சர்தார்

கிறுக்கு சர்தார்

போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து பஞ்சாப் அதிரடி வீரர் சேவாக், தொலைக்காட்சி வர்ணனையாளரிடம் ஹிந்தியில் கமெண்ட் அடித்தார். அவர் கூறுகையில், சர்தார் (ஹர்பஜன்சிங்) இன்று பைத்தியமாகிவிட்டார். அதனால்தான் இந்த அடி, அடித்தார். இப்படி ஒரு அதிரடியாடுவற்கு அவர் என்ன சாப்பிட்டாரோ தெரியவில்லை என்றார்.

கேலிதாங்க

கேலிதாங்க

முன்னதாக 19 பந்துகளில் சேவாக் 36 ரன்களை குவித்து அதிரடி காண்பித்திருந்தார். ஆனால் தனது ஆட்டத்தையும், ஹர்பஜன் மிஞ்சிவிட்டதை இப்படி கேலியாக சொல்லியுள்ளார் சேவாக்.

சர்தார்கள் என்ன சொல்வார்களோ..

சர்தார்கள் என்ன சொல்வார்களோ..

ஹர்பஜன் மற்றும் சேவாக் இருவரும் நண்பர்கள் என்பதால், இந்த கமெண்ட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தாது. ஆனால் சர்தார் சங்கத்தினர் போர்க்கொடி தூக்காமல் இருக்க வேண்டுமே. இதுவே தமிழகத்தில் எந்த ஜாதி அல்லது இனத்து பிரிவினர் பெயரையாவது இப்படி கூறியிருந்தால் இந்நேரத்துக்கு என்ன ஆகியிருக்கும்..

Story first published: Monday, April 13, 2015, 12:16 [IST]
Other articles published on Apr 13, 2015
English summary
Virender Sehwag has his own style of batting and also speaking. And it was no different last night after the IPL 8 match between Kings XI Punjab (KXIP) and Mumbai Indians (KXIP) at Wankhede Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X