For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி வில்லியர்ஸ் அதிரடி..குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு

By Karthikeyan

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் லயன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டி வில்லியர்ஸ் அவுட் ஆகாமல் அதிரடியாக 79 ரன்கள் குவித்தார்.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்றிரவு நடந்த முதல் குவாலிபையர் போட்டியில், டாஸ் வென்ற விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 30 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதேபோல் அதிரடியாக விளையாடி 41 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார் ஸ்மித்.

IPL 2016: AB de Villiers' 78* takes RCB into final, beat Gujarat by 4 wicket

பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக வாட்சன் 4 விக்கெட்டும், அப்துல்லா 2, ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

குஜராத்தை தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோஹ்லி தான் சந்தித்த 2-வது பந்தில் டக் அவுட் ஆகி அதர்ச்சி அளித்தார். குல்கர்னியின் அபார பந்துவீச்சில் சிக்கிய கெய்ல் (9), ராகுல் (0), சச்சின் பேபி (0), ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மற்றொரு முனையில் வாட்சன் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதனால் பெங்களூர் அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. மற்ற வீரர்களும் ரன் குவிக்க தவறினர். இருப்பினும் டிவில்லியர்ஸ், அப்துல்லா அதிரடியால் 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு.

டி வில்லியர்ஸ் 46 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 78 ரன்கள் குவித்தார். அப்துல்லா 24 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தும் அவுட்டாகாமல் வெற்றிக்கு உதவினார்கள். குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக குல்கர்னி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

Story first published: Wednesday, May 25, 2016, 0:37 [IST]
Other articles published on May 25, 2016
English summary
Royal Challengers Bangalore beat Gujarat Lions by four wickets to enter the final of the Indian Premier League here today. (Match Scorecard)
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X