For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னரா.. கோஹ்லியா.. "கப்"பை தூக்கப் போவது யாரு?

பெங்களூர்: ஐபிஎல் போர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

இரு அணிகளுமே இதுவரை கோப்பையை ஒருமுறை கூட வென்றதில்லை என்பதால் யாருக்கு முதல் கோப்பை என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

சன்ரைசர்ஸ் அணி கோப்பையை இதுவரை வென்றதில்லை என்ற போதிலும் கூட ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முன்பு இருந்தபோது அந்த அணி கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெங்களூருக்குத்தான் இதில் வெற்றி கிடைத்தால் அது முதல் கோப்பையாக இருக்கும்.

உள்ளூர் ஆட்டக்காரர் கோஹ்லி

உள்ளூர் ஆட்டக்காரர் கோஹ்லி

பெங்களூரு அணியில் விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகியோர் அபாரமான பார்மில் உள்ளனர். இருவரும் அடித்து நொறுக்க ஆரம்பித்து விட்டால் பிறகு அவர்களைத் தடுக்க அவர்களாலேயே கூட முடியாது.

வெளுத்தெடுக்கும் வார்னர்

வெளுத்தெடுக்கும் வார்னர்

மறுபக்கம் ஹைதராபாத் அணியும் ஏப்ப சாப்பை அல்ல. குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான குவாலியர் 2 போட்டியில் கேப்டன் வார்னர் போட்டுப் பொளந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. வார்னர் அடிக்க ஆரம்பித்து விட்டால்.. எதிரணிக்கு சங்குதான்!

சன்ரைசர்ஸுக்கு இது 3வது இறுதி

சன்ரைசர்ஸுக்கு இது 3வது இறுதி

சன்ரைசர்ஸ் அணி இதற்கு முன்பு 2009 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தோற்றுள்ளது. எனவே இந்த முறை அது நிச்சயம் வெற்றிக்கு முயற்சிக்கும் என்பதால் மல்லக்கட்டு ஜோராகவே இருக்கும்.

பெங்களூருக்கும் 3

பெங்களூருக்கும் 3

ஹைதராபாத்தைப் போலவே பெங்களூரு அணிக்கும் இது 3வது இறுதிப் போட்டியாகும். இந்த அணி இதுவரை கோப்பையை ஒருமுறை கூட வெல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே பெங்களூரும் கோப்பையைத் தட்டிச் செல்ல போராடும்.

செம கேப்டன் கோஹ்லி

செம கேப்டன் கோஹ்லி

பெங்களூரு கேப்டன் கோஹ்லி அபாரமான பார்மில் உள்ளார். கேப்டனாகவும் கலக்கி வருகிறார். அணியின் முக்கிய வீரர்களுடன் நல்லுறவில் உள்ளார். அனைவரின் கெமிஸ்ட்ரியும் அட்டகாசமாக இருக்கிறது. ஒரு அணியாக அத்தனை பேரும் கோஹ்லி தலைமையில் பிரமாதமாக ஆடி வருகிறார்கள்.

தொடக்கத்தில் சொதப்பினாலும்

தொடக்கத்தில் சொதப்பினாலும்

பெங்களூரு அணி ஆரம்பத்தில் கெய்லை எதிர்பார்த்து நம்பி ஏமாந்து போனது. இதனால் ஆரம்ப ஆட்டங்களில் சொதப்பியது. ஆனால் கோஹ்லியும், டிவில்லியர்ஸும், இன்ன பிறரும் சுதாரித்து சுனாமியாக மாறிய பிறகு அணிக்கு ஏறுமுகம்தான்.

15 போட்டிகளில் 919 ரன்கள்

15 போட்டிகளில் 919 ரன்கள்

கோஹ்லி இதுவரை ஆடியுள்ள 15 போட்டிகலில் 919 ரன்களுடன் உள்ளார். இதில் 4 சதம், ஐந்து அரை சதம் அடக்கம். அதிகபட்ச ஸ்கோர் 113 ஆக உள்ளது. இது ஒரு பெரும் சாதனை. டிவில்லியர்ஸ் ஒரு சதம், 6 அரை சதத்துடன் 682 ரன்களுடன் அபாரமான பார்மில் உள்ளார்.

அட்டகாச சஹல்

அட்டகாச சஹல்

பெங்களூரு அணி பவுலிங்கிலும் கூட வலுவாகவே உள்ளது. யுஸ்வேந்திர சஹல் அபாரமாக பந்து வீசி வருககிறார். இவர்தான் இந்தத் தொடரின் டாப் பவுலர்களில் 2வது இடத்தில் இருப்பவர். 20 விக்கெட்களை இதுவரை வீழ்த்தியுள்ளார். இவர் அணிக்குப் பெரும் பலமாக இருப்பார்.

வாட்சன் - ஜோர்டான்

வாட்சன் - ஜோர்டான்

ஷேன் வாட்சன், கிறிஸ் ஜோர்டன் ஆகியோரும் அணிக்கு நல்ல உறுதுணையாக இருந்து வருகின்றனர். வாட்சன் இதுவரை 20 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். கடைசி ஓவர்களில் ஜோர்டான் கை கொடுக்கிறார். வாட்சன் எந்தப் போட்டியிலும் இதுவரை அணியைக் கைவிட்டதில்லை.

ஹைதராபாத்தின் வியூகம்

ஹைதராபாத்தின் வியூகம்

மறுபக்கம் ஹைதராபாத் அணியில் வார்னர், ஷிகர் தவான், யுவராஜ் சிங், என வலுவான வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்குமார் இருக்கிறார். அவர்தான் இந்தத் தொடரின் நம்பர் ஒன் பவுலர். இதுவரை 23 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். ஆசிஷ் நெஹ்ரா இல்லாதது பெரும் பலவீனம்தான். இருப்பினும் அந்த இடத்தை முஸ்தபிசுர் ரஹ்மான் ஓரளவு நிரப்பி வருகிறார்.

பார்க்கலாம் முதல் கோப்பையை தூக்கப் போவது யாரு என்பதை!

Story first published: Sunday, May 29, 2016, 12:41 [IST]
Other articles published on May 29, 2016
English summary
Virat Kohli's inspirational leadership for Royal Challengers Bangalore (RCB) will be up against the brute force with which David Warner has steered Sunrisers Hyderabad (SRH) when the two teams, eyeing their maiden IPL title, square off in a high-intensity summit clash today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X