ஐபிஎல்லின் எந்த ஒரு இறுதிப் போட்டிக்கும் இதுவரை தகுதி பெறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ்தான். இந்த அவலத்தை சரி செய்ய அவர்கள் பாடுபடுகிறார்கள். இந்த முறை வலுவான அணியை அவர்கள் பெற்றுள்ளனர். உள்ளூர் வீரர் கவுதம் கம்பீர் இந்த முறை கேப்டனாகியுள்ளார். அவரது தலைமையில் இந்த சீசனில் புதிய பெருமையைப் பெற டெல்லி அணி களம் காண்கிறது.