For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசான டீம் பாஸ்.. எங்க திரும்ப சொல்லுங்க.. கெத்தாக கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே!

ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை அணியின் மீது வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு தற்போது அந்த அணி தொடர் கோப்பையை கைப்பற்றி வெற்றிகளின் மூலம் பதிலளித்து உள்ளது.

By Shyamsundar

Recommended Video

இனி சென்னையை யாராவது வயசான டீம் என்று சொல்லுவாங்களா ?

சென்னை: ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை அணியின் மீது வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு தற்போது அந்த அணி தொடர் கோப்பையை கைப்பற்றி வெற்றிகளின் மூலம் பதிலளித்து உள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக முடிந்துள்ளது. இறுதி போட்டியில் ஹைதராபாத்தை எளிதாக காலி செய்து சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

சென்னை வீரர்களான வாட்சன், ரெய்னா, அம்பதி ராயுடு, பிதோனி, ராவோ ஆகியோர் தொடந்து நிலையாக ஆடி சென்னைக்கு கோப்பையை கொடுத்துள்ளனர். சென்னை அணியை வயசானவர்களின் அணி என்று கிண்டல் செய்தவர்களுக்கு இப்போது சென்னை வீரர்கள் கோப்பையை வென்று பதிலளித்துள்ளனர்.

எல்லாரும் பழசு

எல்லாரும் பழசு

சென்னை அணி உருவாக்கப்பட்ட போதே, இந்த சென்னை அணி இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த சென்னை போல வலுவான அணி கிடையாது என்று கிண்டல் செய்தார்கள். முக்கியமாக அணியில் நல்ல வீரர் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாருமே இல்லை, வாட்சன் தொடங்கி ஹர்பஜன், ரெய்னா வரை எல்லோருமே பார்ம் அவுட் வீரர்கள் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. மீதம் இருப்பவர் யாருக்கும் அனுபவம் இல்லை என்று கிண்டல் செய்தனர்.

வயதான பாய்ஸ் எல்லோரும்

வயதான பாய்ஸ் எல்லோரும்

சென்னை அணியில் இருக்கும் 85 சதவிகித வீரர்கள் 30 வயதிற்கும் அதிகம் உள்ளவர்கள். ஆடும் 11 பேர் கொண்ட அணியில் 9 பேர் எப்போதும் முப்பது வயதிற்கும் அதிகமானவர்கள். சென்னை அணி, ஐபிஎல் ஏலத்தின் போதே இதற்காக கிண்டல் செய்யப்பட்டது. இவ்வளவு வயசான அணியை வைத்துக் கொண்டு எப்படி கம்பேக் கொடுப்பார்கள் என்று மற்ற ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள்.

எல்லோருக்கும் பதிலடி

எல்லோருக்கும் பதிலடி

ஆனால், அந்த ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லோரும் என்ன நினைத்தார்களோ அதை சென்னை தவிடுபொடியாக்கி இருக்கிறது. விளையாடிய போட்டிகளில் எல்லாம் சென்னை வரிசையாக வென்றது. முக்கியமாக இவர்கள் யாரை வயதானவர்கள் என்று கூறினார்களோ அதே வீரர்களை வைத்து சென்னை வெற்றிபெற்று இருக்கிறது. அதிக கிண்டல் செய்யப்பட்ட வாட்சன், ராயுடு, தோனி, ரெய்னாதான் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இதற்கு முன்பு

இதற்கு முன்பு

முக்கியமாக, இதற்கு முந்தைய தொடரில் மும்பை, பெங்களூரு போன்ற பெரிய அணியில் சரியாக விளையாடாத வீரர்களை சென்னை அணி எடுத்தது. ராயுடு, வாட்சன் போன்றவர்கள் சென்ற ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று கழட்டிவிடப்பட்டார்கள். ஆனால் டோணி அவர்களுக்கு வாய்ப்பளித்து, இப்போது அவர்களின் திறமையை வெளியே கொண்டு வந்துள்ளார்.

ஒவ்வொரு வீரர்

ஒவ்வொரு வீரர்

இந்த தொடரில் சென்னையில் ஒவ்வொரு போட்டிக்கு ஒரு வீரர் என்று வைத்து விளையாடுகிறார்கள். முதல் போட்டியில் பிராவோ விளையாடினார். இரண்டாவது போட்டியில் சாம் பில்லிங்ஸ் விளையாடினார். மூன்றாவது போட்டியில் டோணி கலக்கினார். ராஜஸ்தான் போட்டியில் வாட்சன் வைத்து செய்தார். அடுத்த போட்டியில் அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடினார். இதோ கடைசி போட்டியில் வயதான வாட்சன்.. கோப்பையை வாங்கி கொடுத்துள்ளார்.

Story first published: Sunday, May 27, 2018, 22:47 [IST]
Other articles published on May 27, 2018
English summary
Rise of OLD players CSK into Best players CSK.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X