தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்டது முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீதான நம்பிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிடஹாஸ் கோப்பை இறுதிப் போட்டியில், இறுதி ஓவரில் அதிரடியாக ஆடி இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்து அசத்தியவர் தினேஷ் கார்த்திக். கொல்கத்தா அணி திறமையான இளம் வீரர்களும், நல்ல அனுபவம் உடைய வீரர்களையும் கொண்டுள்ளது.