For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களை விட்டா வேற ஆள் இல்லை.. மீண்டும் ரஹானேவை தேடி வந்த கேப்டன் பதவி.. என்ன நடந்தது?

ஜெய்ப்பூர் : ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ், அஜின்க்யா ரஹானேவை மீண்டும் கேப்டனாக நியமித்துள்ளது.

முன்னதாக, ஐபிஎல் தொடரின் பாதியில் அதிக தோல்விகளை காரணம் காட்டி, ரஹானேவின் கேப்டன் பதவியை பறித்தது ராஜஸ்தான் நிர்வாகம்.

உலகக்கோப்பையில் விஜய் ஷங்கருக்கு உலகக்கோப்பையில் விஜய் ஷங்கருக்கு "பெப்பே".. "கேம்" ஆடும் கோலி.. எல்லாம் அந்த ஒருவருக்காக!!

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

ஐந்து போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் தற்போது உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட ஆஸ்திரேலியா கிளம்பிவிட்டார். ராஜஸ்தான் அணியில் ஸ்மித், ரஹானேவை விட்டால் அனுபவமும், தலைமைப் பண்பும் கொண்ட வீரர்கள் யாரும் இல்லை. அதிக சர்வதேச போட்டிகளில் ஆடியிராத சஞ்சு சாம்சன் மட்டுமே உள்ளார்.

மீண்டும் கேப்டன்

மீண்டும் கேப்டன்

எனவே, வேறு வழியின்றி ரஹானேவை மீண்டும் கேப்டனாக நியமித்துள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம். ஸ்டீவ் ஸ்மித் மே மாதம் ஆஸ்திரேலியா சென்று விடுவார் என்று தெரிந்தே அவரை ராஜஸ்தான் அணி கேப்டனாக நியமித்தது. ஆனால், அந்த மாற்றம் நிச்சயம் அணிக்கு உதவியுள்ளது என்றே சொல்லலாம்.

ஸ்மித் தந்த வெற்றிகள்

ஸ்மித் தந்த வெற்றிகள்

எப்படி என்றால், ரஹானே கேப்டனாக இருந்த எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றது ராஜஸ்தான் அணி. ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகள் பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெற்றிகள் கிடைத்தது ஒருபுறம் என்பதோடு, ரஹானே பார்முக்கு திரும்பினார்.

பார்முக்கு திரும்பிய ரஹானே

பார்முக்கு திரும்பிய ரஹானே

ரஹானே கேப்டனாக இருந்த போது, அதிரடியாக ரன் குவிக்கவில்லை. சராசரியாக 20-25 ரன்கள் எடுத்து வந்தார். அது அணிக்கு உதவவில்லை. ஆனால், கேப்டன் பதவியை பறித்தவுடன் வந்த உத்வேகத்தில் உச்சகட்ட பார்முக்கு திரும்பி சதம் அடித்தார்.

பிளே-ஆஃப் நிலை

பிளே-ஆஃப் நிலை

தற்போது, ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால், ரஹானே தலைமையில் தன் கடைசி லீக் போட்டியில் வெல்ல வேண்டும். ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மூன்றும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுக்கக்கூடாது. இது இரண்டும் நடக்க வேண்டும்.

Story first published: Friday, May 3, 2019, 23:24 [IST]
Other articles published on May 3, 2019
English summary
IPL 2019 Ajinkya Rahane return to Captaincy after Steve Smith left to Australia for World cup preparation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X