For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக் பெயரை சொல்லாமல்.. கடுமையாக விமர்சித்த ரஸ்ஸல்.. கொல்கத்தா அணிக்குள் கலகமா?

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதற்கு, தவறான முடிவுகள் தான் காரணம் என அந்த அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கூறியுள்ளது ஐபிஎல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2019 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் எதிரணிகளை மிரட்டி முதல் ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றது. ஒரு போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது.

RR vs SRH:மனிஷ் பாண்டே விளாசிய 61... ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சன் ரைசர்ஸ் RR vs SRH:மனிஷ் பாண்டே விளாசிய 61... ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சன் ரைசர்ஸ்

பிளே-ஆஃப் பிரச்சனை

பிளே-ஆஃப் பிரச்சனை

ஆனால், அதன் பின் தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது. அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற சூழலில் உள்ளது கொல்கத்தா.

தவறான முடிவுகள்

தவறான முடிவுகள்

இது பற்றி பேசிய ஆண்ட்ரே ரஸ்ஸல், "எங்களிடம் நல்ல அணி உள்ளது. ஆனால், தவறான முடிவுகள் எடுத்தால், போட்டியில் தோற்றுத்தான் போக வேண்டும். அதை தான் நாங்கள் செய்த வருகிறோம்" என்று கூறி உள்ளார்.

அணி செய்த தவறுகள்

அணி செய்த தவறுகள்

"என்னால் சில போட்டிகளை சுட்டிக் காட்ட முடியும். நாங்கள் சில இடங்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தால் அல்லது சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும்" எனக் கூறி அணி செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார்.

மோசமான பீல்டிங்

மோசமான பீல்டிங்

மேலும், பலரும் கூறுவது போல பேட்டிங் தங்கள் அணியின் பலவீனம் அல்ல, பந்து வீச்சு மற்றும் மோசமான பீல்டிங் தான் பலவீனம். அதனால்தான் போட்டிகளில் தோற்று வருகிறோம் எனக் கூறினார் ரஸ்ஸல். தங்கள் அணி தான் மோசமான பீல்டிங் அணி எனவும் கடுமையாக குற்றம்சாட்டினார்.

தினேஷ் கார்த்திக்கை சொல்கிறாரா?

தினேஷ் கார்த்திக்கை சொல்கிறாரா?

ரஸ்ஸல் கூறும் பெரும்பாலான தவறுகள், கேப்டன்சி சார்ந்தவை. ஒருவேளை கேப்டன் தினேஷ் கார்த்திக்கை தான் குற்றம் சாட்டிப் பேசுகிறாரா ரஸ்ஸல்? பல போட்டிகளில் ரஸ்ஸல்-ஐ முன் வரிசையில் களமிறக்க வேண்டும் என்ற விமர்சகர்களின் எண்ணத்துக்கு மாறாக, கடைசி ஆறாவது, ஏழாவது வீரராகவே ரஸ்ஸல் பயன்படுத்தப்பட்டு வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் சிக்கல்

மேலும் சிக்கல்

ஏற்கனவே, தினேஷ் கார்த்திக் கேப்டன்சி குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அணிக்குள் இருக்கும் முக்கிய வீரரே அவரை பெயர் சொல்லாமல் விமர்சித்து இருப்பது கொல்கத்தா அணிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.

Story first published: Saturday, April 27, 2019, 22:58 [IST]
Other articles published on Apr 27, 2019
English summary
IPL 2019 : Andre Russell says bad decisions are cause for losses in a row
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X