For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, கோலி, ரோஹித் எல்லாம் இல்லை.. இந்த ஐபிஎல் தொடரில் இவர் தான் சிறந்த கேப்டன்!!

சிட்னி : முன்னாள் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் நடப்பு ஐபிஎல் தொடரில் தன்னை கவர்ந்த கேப்டன் யார் என கூறியுள்ளார்.

நட்சத்திர வீரர்களான தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோரில் ஒருவர் பெயரை கூறுவார் என எதிர்பார்த்தால், அதற்கு முற்றிலும் மாறுபட்டு பதில் கூறியுள்ளார் பிராட் ஹாக்.

நல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் நல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம்

சிறந்த கேப்டன் யார்?

சிறந்த கேப்டன் யார்?

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் என்கிறார் பிராட் ஹாக். அதற்கு அவர் சொல்லும் காரணமும் நியாயமானதாக உள்ளது.

முன்னணியில் டெல்லி

முன்னணியில் டெல்லி

டெல்லி அணி கடந்த ஐபிஎல் சீசன்களில் எல்லாம் புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில்தான் இருந்தது. ஆனால், இந்த முறை 11 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் உள்ளது.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

இந்த வெற்றிக்கு காரணம், ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கிலும், தலைமைப் பண்பிலும் சிறந்து விளங்குவது தான் என்கிறார் பிராட் ஹாக். அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் முறையும், கேப்டன் பொறுப்பை மிகுந்த உரிமையோடு கையாள்வதையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

அணியில் இடம் இல்லை

அணியில் இடம் இல்லை

இத்தனைக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வரும் இளம் வீரர். அவரது தலைமையின் கீழ் பெரும் அனுபவம் பெற்ற நட்சத்திர வீரர்கள் - ரபாடா, ஷிகர் தவான், ட்ரென்ட் பவுல்ட் இஷாந்த் சர்மா ஆகியோர் ஆடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் எப்படி?

பேட்டிங் எப்படி?

இந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 போட்டிகளில் 281 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு அரைசதம் அடங்கும். இதில் இரு அரைசதங்களும் அடங்கும். மத்திய ஓவர்களில் விக்கெட் விழாமல் அணியை காப்பாற்றும் வேலையை தான் இந்த தொடரில் பெரும்பாலும் செய்து வருகிறார் இவர்.

இவர்களும் காரணம்

இவர்களும் காரணம்

டெல்லி அணியின் இந்த வெற்றிப் பாதைக்குப் பின்னால், ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமின்றி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆலோசகர் சௌரவ் கங்குலியின் வழிகாட்டுதலும் உள்ளது என்பது மறுக்க முடியாது.

Story first published: Saturday, April 27, 2019, 11:41 [IST]
Other articles published on Apr 27, 2019
English summary
IPL 2019 : Brad Hogg picks his favourite IPL captain in 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X