For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் ஓவரா இருக்கே.. ரெய்னா, ஹர்பஜனுக்கு.. கட்டிப்பிடி வைத்தியம் செய்த ரிஷப் பண்ட்!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் இதுவரை நடந்த போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கின்றன டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்.

இந்த அணிகள் மோதிய பரபர போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சென்னை அணியின் இருக்கும் சீனியர் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தார்.

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் வீரர்

ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். குறைந்த கால இடைவெளியில் ஒருநாள் அணியிலும் இடம் பிடித்து, உலகக்கோப்பை தொடரில் ஆடலாம் என்ற அவரது கனவு நிறைவேறவில்லை.

நல்ல பார்மில் பண்ட்

நல்ல பார்மில் பண்ட்

எனினும், ஐபிஎல் தொடரில் ஓரளவு சிறப்பாக ஆடி வருகிறார். எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்காவிட்டாலும், சில போட்டிகளில் அணியை தனி ஆளாக வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அளவு ஆடி வருகிறார்.

சீனியர் வீரர்கள்

சீனியர் வீரர்கள்

இந்த நிலையில், சேப்பாக்கத்தில் போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும், தன் இந்திய அணி சீனியர்கள் ஒவ்வொருவராக பார்த்து கட்டிப் பிடித்து தன் மரியாதையை வெளிக்காட்டி உள்ளார் ரிஷப் பண்ட்.

புகைப்படங்கள்

இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் மோஹித் சர்மா ஆகியோருக்கு செய்துள்ளார் சின்னத்தம்பி ரிஷப் பண்ட். சென்னை அணி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் "ரிஷ்-ஹக் பண்ட்" (Rish-Hug Pant) என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.

ஐஸ் வைக்கிறாரோ?

ஐஸ் வைக்கிறாரோ?

ஏற்கனவே, மூத்த வீரர்கள் என்றால், குறிப்பாக தோனி குறித்து, மிகவும் உயர்வாக பேசுவார் ரிஷப் பண்ட். இப்போது மற்ற மூத்த வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்துள்ளார். ரொம்ப ஐஸ் வைக்கிறாரோ?

Story first published: Wednesday, May 1, 2019, 22:26 [IST]
Other articles published on May 1, 2019
English summary
IPL 2019 CSK vs DC : Rishabh Pant hugged CSK seniors before match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X