For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி சிஎஸ்கே கேப்டன் தோனி இல்லை.. ரெய்னா தான்! தீயாய் பரவும் வதந்தி.. உண்மை என்ன?

சென்னை : அடுத்த ஐபிஎல் தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா செயல்பட உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

2019 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்று முடிவுக்கு வர உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் செல்ல உள்ளது. இந்த சூழ்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடர் குறித்த பேச்சுக்கள் மெல்ல கிளம்பத் துவங்கி உள்ளது.

ரோஹித்தை எட்டிப் பிடித்த ஆட்டநாயகன் தோனி.. பீல்டிங்கில் சதம் அடித்த சுரேஷ் ரெய்னா!! ரோஹித்தை எட்டிப் பிடித்த ஆட்டநாயகன் தோனி.. பீல்டிங்கில் சதம் அடித்த சுரேஷ் ரெய்னா!!

தோனி ஆடுவாரா?

தோனி ஆடுவாரா?

பலரும் "தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தொடர்ந்து ஆடுவாரா?" என கேட்டு வருகின்றனர். அதற்கு காரணம், தோனி உலகக்கோப்பை தொடர் முடிந்த பின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வரும் தகவல் தான்.

தோனி இடத்தில் ரெய்னா

தோனி இடத்தில் ரெய்னா

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின், பேசுகையில், தோனி சென்ற பின், என்னை அந்த (கேப்டன்) இடத்தில் பார்ப்பீர்கள். ஆனால், எனக்கு அவர் போன்ற திறன் வேண்டும்" என கூறி இருந்தார்.

தோனி விரும்பும் வரை..

தோனி விரும்பும் வரை..

மேலும், "தோனி ஆட விரும்பும் வரை சென்னை அணிக்கு ஆடலாம். உங்களுக்கு தோனியை பற்றியும், சென்னை அணியை பற்றியும் நன்கு தெரியும்" எனவும் கூறி இருந்தார். ரெய்னா கூறிய இந்த விஷயங்கள் தான் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி ஆடமாட்டார் என்ற பேச்சு கிளம்ப காரணமாகி இருக்கிறது.

மூத்த வீரர் ரெய்னா

மூத்த வீரர் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்து மூத்த வீரர், அதிக டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் மற்றும் ரன் குவித்தது, உள்ளிட்ட காரணங்களால் ரெய்னா சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ரெய்னாவின் தோல்விகள்

ரெய்னாவின் தோல்விகள்

இந்த சீசனில் தோனி களமிறங்காத இரண்டு போட்டிகளுக்கு ரெய்னா தான் தலைமை ஏற்றார். அந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்தது. சுரேஷ் ரெய்னா, தோனி அளவுக்கு சிறந்த கேப்டனாக இருக்க முடியாது. அதை அவரே கூறியுள்ளார்.

தோனிக்கு மாற்று?

தோனிக்கு மாற்று?

அப்படி என்றால், தோனி போல சென்னை அணியை வழிநடத்த இனி யாரும் வருவார்களா? என்பது கேள்விக் குறி தான். ஒருவேளை தோனி போட்டிகளில் ஆடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும், சென்னை அணியின் ஆலோசகர் போன்ற பதவிகளில் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, May 2, 2019, 21:22 [IST]
Other articles published on May 2, 2019
English summary
IPL 2019 CSK vs DC : Suresh Raina hinted he will take over CSK captaincy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X