For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி உலக மகா பேட்ஸ்மேனா இருக்கலாம்.. ஆனா இந்த சிஎஸ்கே பௌலர் கிட்ட ஜம்பம் பலிக்காதாமே!!

Recommended Video

IPL 2019: விராட் கோலியை வீழ்த்துவதற்கு சென்னை வைத்திருக்கும் ஆயுதம்- வீடியோ

சென்னை : ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டியில் கடந்த ஆண்டின் சாம்பியன் சென்னை அணி வெல்லுமா? அல்லது ஐபிஎல்-இல் ராசியில்லாத அணியாக வலம் வரும் பெங்களூர் அணி வெல்லுமா? என்ற விவாதம் சூடு பறந்து வருகிறது.

CSK vs RCB IPL 2019:அனைவரும் சேப்பாக்கத்தை நோக்கி ! 4 அடுக்கு பாதுகாப்பு, 2 ஆயிரம் போலீசார் குவிப்பு CSK vs RCB IPL 2019:அனைவரும் சேப்பாக்கத்தை நோக்கி ! 4 அடுக்கு பாதுகாப்பு, 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

தோனியின் ஆயுதம்

தோனியின் ஆயுதம்

இந்த நிலையில், பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியை கட்டுப்படுத்தி, வீழ்த்த சென்னை அணியின் கேப்டன் தோனி ஒரு வீரரை ஆயுதமாக தேர்வு செய்து வைத்துள்ளார். யாருப்பா அவரு?

ஜடேஜா

ஜடேஜா

அது வேறு யாருமில்லை. சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜா தான் அந்த ஆயுதம். ஐபிஎல் தொடரில் ஜடேஜாவை சமாளிக்க முடியமால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி திணறி வருகிறார்.

குறைந்த ரன்கள்

குறைந்த ரன்கள்

இதுவரை ஐபிஎல் தொடரில் ஜடேஜா தனக்கு வீசிய 104 பந்துகளில் 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கோலி. டி20யில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என எடுப்பது குறைவே.

விக்கெட் வீழ்ச்சி எத்தனை?

விக்கெட் வீழ்ச்சி எத்தனை?

மேலும், 18 சந்திப்புகளில் 3 முறை அவரிடம் விக்கெட்டை இழந்துள்ளார். விக்கெட் வீழ்ச்சி அதிகம் இல்லை என்றாலும், ஜடேஜா பந்தில் ரன் அடிக்க கோலி திணறி வருகிறார். இதனால், அழுத்தம் ஏற்பட்டு கோலி ஆட்டமிழக்கஅதிக வாய்ப்புள்ளது.

பயன்படுத்திய தோனி

பயன்படுத்திய தோனி

இந்த உண்மையை அறிந்த தோனி கடந்த சீசனில் ஜடேஜாவை பயன்படுத்தினார். அதே போல, இந்த ஐபிஎல் தொடரிலும் ஜடேஜாவை ஆயுதமாக தோனி பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த சீசனில்..

கடந்த சீசனில்..

கடந்த சீசனில் ஜடேஜா பந்தில் கோலி 18 ரன்களில், பௌல்டு அவுட் ஆனார். அப்போது ஜடேஜாவை முறைத்துக் கொண்டே கோலி சென்றது முக்கிய செய்தியாக மாறியது. கோலி, அவுட் ஆகி கோபப்பட்டு பார்த்திராத பலரும் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

அணியில் சேர்ப்பாரா?

அணியில் சேர்ப்பாரா?

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியில் ஜடேஜா களமிறங்கினால், கோலி - ஜடேஜா மோதலை நாம் ரசிக்கலாம். ஜடேஜாவை அணியில் சேர்ப்பாரா தோனி?

Story first published: Saturday, March 23, 2019, 15:56 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
IPL 2019 : CSK vs RCB - Dhoni may use Jadeja to stop Virat Kohli from scoring big runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X