For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மத்த டீமா இருந்தா கழட்டி விட்டுருப்பாங்க.. தோனிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.. உருகிய வீரர்!

Recommended Video

Chennai vs Hyderabad: பல அணிகள்,இந்நேரத்திற்கு என்னை நீக்கிஇருப்பார்கள் : உருகிய வீரர்!- வீடியோ

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் முதல் எட்டு போட்டிகளில் ஏழு வெற்றிகள் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதன் பின் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.

அதற்கு காரணம், இந்த தொடர் துவங்கியது முதல் சரியாக ஆடாத டாப் ஆர்டர் வீரர்கள் தான் என கூறப்பட்டது. குறிப்பாக துவக்க வீரர் ஷேன் வாட்சன், மிகவும் மோசமாக ஆடி வந்தார்.

ஐபிஎல் படம் எங்க ஓடுனாலும்... அங்க நாங்க தான் ஹீரோ.... புரியுதா? ஆரம்பிச்சுட்டாருப்பா இவரு ஐபிஎல் படம் எங்க ஓடுனாலும்... அங்க நாங்க தான் ஹீரோ.... புரியுதா? ஆரம்பிச்சுட்டாருப்பா இவரு

வாட்சன் அபாரம்

வாட்சன் அபாரம்

அவர் நேற்று சென்னையில் நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஷேன் வாட்சன் அபாரமாக ஆடினார். ஹைதராபாத் அணி நிர்ணயித்த 176 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு தூணாக நின்றார்.

நன்றி

நன்றி

53 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார் வாட்சன். இதையடுத்து சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டிக்குப் பின் பேசிய ஷேன் வாட்சன், தான் இதற்கு முன் சரியாக ரன் குவிக்கவில்லை என்பது நிச்சயம். கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் என் மீது வைத்த நம்பிக்கைக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றார்.

மற்ற அணிகள்..

மற்ற அணிகள்..

நான் ஆடிய பல அணிகள், இந்நேரத்திற்கு என்னை நீக்கி இருப்பார்கள். ஆனால், இவர்கள் (தோனி, பிளெம்மிங்) என்னை நம்பினார்கள். உண்மையில் நான் பாகிஸ்தான் சூப்பர் லீக், பிக் பாஷ் லீக் தொடர்களில் சரியாக ஆடினேன், பௌலிங்கும் செய்தேன் என குறிப்பிட்டார்.

மோசமான நிலை

மோசமான நிலை

வாட்சன் நேற்று சேர்த்த 96 ரன்களுக்கு முன் வரை, 10 போட்டிகளில் 147 ரன்கள் மட்டுமே சேர்த்து மோசமாக காட்சி அளித்தார். தற்போது 11 போட்டிகளில் 243 ரன்கள் சேர்த்துள்ளார் வாட்சன். இதே பார்முடன் இவர் அடுத்து வரும் போட்டிகளில் ஆடும் பட்சத்தில் சென்னை அணி எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும்.

Story first published: Wednesday, April 24, 2019, 12:28 [IST]
Other articles published on Apr 24, 2019
English summary
IPL 2019 CSK vs SRH : Shane Watson expresses thanks to Dhoni and Fleming
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X