கடந்த சீசன் வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியாக இருந்து, இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணியாக மாறி உள்ளது டெல்லி. இந்த அணி பெயரை மாற்றினால் விதியும் மாறும் என நம்புகிறது. கடந்த வருடம் மிக மோசமாக செயல்பட்ட இந்த அணி, இந்த ஆண்டு சில முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளதால், ஐபிஎல் 2019 சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லி அணியின் விவரம் இங்கே.