For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-இல் தோனியை குறைச்சு எடை போட்டுறாதீங்க.. இன்னும் அவர் தான் ரெக்கார்டு மன்னன்!

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறிப்பிட்ட சில சாதனைகளை தன் வசமாக்கி வைத்துள்ளார்.

Recommended Video

ஐபிஎல்-ன் சிறந்த கேப்டன் இவங்க தான்... வெளியான தகவல்

ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை உட்பட தோனியின் சில முக்கிய சாதனைகளை குறித்து பார்க்கலாம்.

புரிஞ்சிக்கிட்டீங்களா? இந்த 5 காரணம் தான்.. உங்களுக்கு ஐபிஎல் கோப்பை கிடைக்காம போனதுக்கு..!! புரிஞ்சிக்கிட்டீங்களா? இந்த 5 காரணம் தான்.. உங்களுக்கு ஐபிஎல் கோப்பை கிடைக்காம போனதுக்கு..!!

கேப்டன் தோனியின் ரன்கள்

கேப்டன் தோனியின் ரன்கள்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே அணியின் கேப்டனாக இருந்த தோனி, கேப்டனாக ஆடிய 159 போட்டிகளில் 3725 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தோனி. விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 96 போட்டிகளில் 3546 ரன்கள் குவித்துள்ளார்.

அதிக ஸ்டம்பிங்

அதிக ஸ்டம்பிங்

ஐபிஎல் தொடரில் 33 ஸ்டம்பிங் செய்துள்ளார் தோனி. இதன் மூலம் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி. ராபின் உத்தப்பா 32 ஸ்டம்பிங், தினேஷ் கார்த்திக் 30 ஸ்டம்பிங் செய்து அடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

அதிக சிக்ஸ்

அதிக சிக்ஸ்

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். தோனி 186 சிக்ஸர்கள் அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 185, ரோஹித் சர்மா 184 சிக்ஸர்கள் அடித்து தோனியை விரட்டி வருகின்றனர்.

அதிக சராசரி

அதிக சராசரி

குறைந்தபட்சம் 500+ ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் தோனி. அவரது பேட்டிங் சராசரி 40.16 ஆகும். தோனியின் நாட்-அவுட்களின் எண்ணிக்கை மட்டும் 58 ஆகும்.

சிறந்த கேப்டன் தோனி

சிறந்த கேப்டன் தோனி

கேப்டனாக அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடியவர் தோனி. அதே போல, குறைந்த பட்சம் 25 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்த வீரர்களில், அதிக வெற்றி சராசரி வைத்துள்ளதும் தோனியே. 159 ஐபிஎல் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள தோனி, அதில் 94 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி சராசரி 59.49 ஆகும்.

Story first published: Thursday, March 21, 2019, 9:08 [IST]
Other articles published on Mar 21, 2019
English summary
IPL 2019 : Here are the important IPL records hold by CSK captain Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X