For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங் நல்லா இருக்கு.. கேப்டன்சி சரியில்லையே.. பதிலடி கொடுப்பாரா தினேஷ் கார்த்திக்?

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. தான் ஆடிய கடைசி ஆறு லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது.

கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருந்தது கொல்கத்தா. இந்தப் போட்டியின் தோல்வி குறித்தும், தன் கேப்டன்சி மீதான விமர்சனம் குறித்தும் பேசினார் தினேஷ் கார்த்திக்.

தோல்வி

தோல்வி

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 175 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தவித்தது. எனினும், 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கொல்கத்தா அணியின் தோல்விக்கு இரவு நேரத்தில் அதிகமாக இருந்த பனி தான் காரணம் என கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக். மைதானத்தின் அவுட்-பீல்டில் இருந்த பனியால் பந்து ஈரமாக காணப்பட்டது. அதனால், பந்துவீச்சு கடினமானதாக இருந்ததாக தெரிவித்தார்.

கேப்டன்சி சரியில்லை?

கேப்டன்சி சரியில்லை?

தொடர் தோல்விகளை அடுத்து பலரும் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி சரியில்லை என விமர்சிக்கத் துவங்கி இருக்கிறார்கள். இதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், "அணி நிர்வாகமும், வீரர்களும் எந்தளவு தன்னை நம்புகிறார்கள் என்பதை பொறுத்து தான் இது அமையும்" என்று மையமாக கூறினார்.

பேட்டிங் விமர்சனம்

பேட்டிங் விமர்சனம்

தினேஷ் கார்த்திக் பேட்டிங் குறித்தும் விமர்சனங்கள் இருந்தது. ஆனால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து கலக்கினார். அதன் மூலம், ஐபிஎல் பார்ம் மட்டுமின்றி, உலகக்கோப்பை அணியில் தான் தேர்வு செய்யப்பட்டதற்கும் சேர்த்து பதிலடி கொடுத்துள்ளார். பேட்டிங்கில் பதிலடி கொடுத்தாலும், கேப்டன்சியிலும் பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

Story first published: Friday, April 26, 2019, 12:52 [IST]
Other articles published on Apr 26, 2019
English summary
IPL 2019 KKR vs RR : Dinesh Karthik explains why KKR lost against RR
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X