For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க.. பேசிட்டே இருந்தாரு.. படக்குன்னு கேட்ச்சை பிடிச்சுட்டாரு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

சண்டிகர் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஆன 52வது ஐபிஎல் லீக் போட்டியில், கொல்கத்தா வீரர் கிறிஸ் லின் கவனம் சிதறாமல் கேட்ச் பிடித்து ரசிகர்களை திகைக்க வைத்தார்.

ஐபிஎல் போட்டிகளின் இடையே களத்தில் இருக்கும் சில வீரர்களிடம் காதில் மாட்டிக் கொண்டு பேசும் மைக் மூலம் வர்ணனையாளர்கள் பேசுவது வழக்கம்.

ஐசிசியின் டி 20 தரவரிசைப் பட்டியல்... பாகிஸ்தான் முதலிடம்... 5வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா ஐசிசியின் டி 20 தரவரிசைப் பட்டியல்... பாகிஸ்தான் முதலிடம்... 5வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா

பஞ்சாப் பேட்டிங

பஞ்சாப் பேட்டிங

அது போன்று இந்தப் போட்டியில், கொல்கத்தா வீரர் கிறிஸ் லின்-இடம் பேசிக் கொண்டு இருந்தனர் வர்ணனையாளர்கள். அப்போது பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது. களத்தில் துவக்க வீரர்கள் ராகுல், கிறிஸ் கெயில் ஆடி வந்தனர்.

ராகுல் கொடுத்த கேட்ச்

ராகுல் கொடுத்த கேட்ச்

மூன்றாவது ஓவரை வீசினார் சந்தீப் வாரியர். அந்த ஓவரின் 3வது பந்துக்கு முன், கிறிஸ் லின் மைக்கில் ஆண்ட்ரே ரஸ்ஸல் குறித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ராகுல் அடித்த பந்து, லின்-ஐ நோக்கி வந்தது.

ரசிகர்கள் ஆச்சரியம்

உடனே பேச்சை நிறுத்தி விட்டு, ஓடிய கிறிஸ் லின், கவனம் சிதறாமல் கேட்ச்சை பிடித்தார். இதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சில வினாடிகள் முன்பு வரை பேசியவர், எந்த கவனமும் சிதறாமல் எப்படி கேட்ச் பிடித்தார் என ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பேட்டிங்கிலும் கலக்கல்

பேட்டிங்கிலும் கலக்கல்

பின்னர் பேட்டிங்கிலும் கலக்கினார் கிறிஸ் லின். 22 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒருவேளை கிறிஸ் லின் கவனம் சிதறி அந்த கேட்ச்சை விட்டிருந்தால், அதுவே தலைப்பு செய்தியாக மாறி, அவரை திட்டித் தீர்த்திருப்பார்கள்.

Story first published: Friday, May 3, 2019, 22:47 [IST]
Other articles published on May 3, 2019
English summary
IPL 2019 KXIP vs KKR : Chris Lynn took a catch while talking in mic on Live TV
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X