For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு கோபம் வர்றது அபூர்வம்! சகட்டுமேனிக்கு திட்டிவிட்டு.. விளக்கம் சொன்ன தினேஷ் கார்த்திக்!

சண்டிகர் : பஞ்சாப் - கொல்கத்தா இடையே ஆன போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கடும் கோபமடைந்து வீரர்களை திட்டினார்.

கடந்த சில நாட்களாகவே கொல்கத்தா அணி கூடாரத்தில் சலசலப்பு இருந்து வந்தது. ஆனால், இப்படி போட்டிக்கு நடுவே அந்த அணியின் கேப்டன், வீரர்களை திட்டும் அளவுக்கு அது பெரிதாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை.

டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங்... விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங்... விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

ரஸ்ஸல் புகார்

ரஸ்ஸல் புகார்

கடந்த வாரம் ரஸ்ஸல் தவறான முடிவுகள் தான் அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என கேப்டன் தினேஷ் கார்த்திக் பெயரை சொல்லாமல் புகார் கூறினார். அதற்கடுத்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றதை அடுத்து அணியில் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டது என்றே பலரும் எண்ணினர்.

சுனில் நரைன் வெறுப்பு

சுனில் நரைன் வெறுப்பு

ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் தனக்கு பந்து வீச வாய்ப்பு தரவில்லை என முகத்தை காட்டினார். அவருக்கு ராபின் உத்தப்பா ஆதரவாக இருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திட்டிய தினேஷ் கார்த்திக்

திட்டிய தினேஷ் கார்த்திக்

இதையெல்லாம் விட கொல்கத்தா அணி பீல்டிங் செய்த போது, முதல் இடைவேளையில் கேப்டன் தினேஷ் கார்த்திக், தன் வீரர்களை அழைத்து கடுமையாக திட்டினார். இதுவரை யாரும் அவரை இத்தனை ஆக்ரோஷமாக பார்த்ததில்லை.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தா அணிக்குள் என்ன பிரச்சனை என பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தான் ஏன் கோபமடைந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

மகிழ்ச்சி அளிக்கவில்லை

மகிழ்ச்சி அளிக்கவில்லை

அவர் கூறுகையில், "கடந்த சில நாட்கள் கடினமாக இருந்தது. பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் செயல்பட்ட விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நான் அப்போது என்ன நினைத்தேன் என அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன்." என்றார்.

அபூர்வம்

அபூர்வம்

மேலும், "இது அபூர்வம். பலர் என்னை இப்படி கோபப்பட்டு பார்த்திருக்க மாட்டார்கள்." என்றும் கூறினார் தினேஷ் கார்த்திக். இத்தனை பிரச்சனைக்கு நடுவே கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 4, 2019, 18:13 [IST]
Other articles published on May 4, 2019
English summary
IPL 2019 KXIP vs KKR : Dinesh Karthik explains Why he got angry during the match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X