For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பந்து வரை பரபரப்பு.. ஹார்ட் பீட் எகிற வைத்த.. தரமான ஐபிஎல் ஃபைனல்.. என்ன நடந்தது? #MIvsCSK

Recommended Video

IPL 2019 Finals Chennai vs Mumbai | 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடர் தரமான டி20 இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் என மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்ற இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.

போட்டியின் துவக்கம் முதல் இறுதி வரை, இரு அணிகளும் ஒருவரை, ஒருவர் முந்தி ஆதிக்கம் செலுத்தி, ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்தனர்.

1
45949

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஆனால், எப்படி வெற்றி பெற்றது என்பது தான் சுவாரசியம்.

பெருசா விக்கெட்டை தியாகம் பண்றாரு.. கடைசி ஓவரில் பொல்லார்டு-க்காக ரன் அவுட்.. கடுப்பான ரசிகர்கள்!! பெருசா விக்கெட்டை தியாகம் பண்றாரு.. கடைசி ஓவரில் பொல்லார்டு-க்காக ரன் அவுட்.. கடுப்பான ரசிகர்கள்!!

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நான்கு ஓவர்களில் அதிரடியைக் காட்டினர் ரோஹித் சர்மா, டி காக். ஆனால், அடுத்த இரு ஓவர்களில் இருவரும் ஆட்டமிழந்தனர். ரோஹித் 15, டி காக் 29 ரன்கள் எடுத்து வெளியேற, மும்பை அணியின் ரன் வேகம் குறைந்தது.

பொல்லார்டு அதிரடி

பொல்லார்டு அதிரடி

தொடர்ந்து சூர்யகுமார் 15, இஷான் கிஷன் 23, க்ருனால் பண்டியா 7, ஹர்திக் பண்டியா 16, ராகுல் சாஹர் 0 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பொல்லார்டு மட்டுமே போராடி 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அணிக்கு உதவினார்.

பந்துவீச்சில் ஆதிக்கம்

பந்துவீச்சில் ஆதிக்கம்

20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட்கள் இழந்து 149 ரன்கள் எடுத்தது. சென்னை அணி பந்துவீச்சில் கலக்கியது. பெரும்பாலான நேரம் சென்னை அணியின் பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்தியது. தீபக் சாஹர் 3, ஷர்துல் தாக்குர் 2, இம்ரான் தாஹிர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஹர்பஜன், ஜடேஜா சிக்கனமாக ரன் கொடுத்து பந்து வீசினர்.

மிடில் ஆர்டர் சரிவு

மிடில் ஆர்டர் சரிவு

150 ரன்கள் என்பது எளிய இலக்கு என்றே அனைவரும் எண்ணிய நிலையில், சென்னை அணிக்கு டு ப்ளேசிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அதை உறுதி செய்தார். எனினும், மிடில் ஆர்டரில் ரெய்னா 8, ராயுடு 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றினர்.

தோனி செய்த தவறு

தோனி செய்த தவறு

சரி, தோனி தான் ஒரே வழி என எண்ணிய நிலையில், தோனி இதுவரை செய்யாத ஒரு தவறை செய்தார். ஓவர்த்ரோவில் கூடுதல் ரன் எடுக்க நினைத்து ஓடிய தோனி ரன் அவுட் ஆனார். எதிர்பாராத நேரத்தில் தோனி 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, போட்டி மும்பை அணிக்கு சாதகமாக மாறியது.

வாட்சன் - பிராவோ ஜோடி

வாட்சன் - பிராவோ ஜோடி

அதன்பின், வாட்சன் - பிராவோ இணைந்து அணியை மீட்டனர். பிராவோ 15 ரன்கள் அடித்து வெளியேறினார். வாட்சன் அதிரடி காட்டி ரன் குவிப்பில் ஈடுபட கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை அடைந்தது சென்னை.

கடைசி ஓவரில் மலிங்கா

கடைசி ஓவரில் மலிங்கா

மும்பை அணியின் அனுபவ பந்துவீச்சாளர் மலிங்கா பந்து வீசினார். முதல் மூன்று பந்துகளில் 4 ரன்கள் எடுத்தது சென்னை. 4வது பந்தில் வாட்சன் 2 ரன்கள் ஓட ஆசைப்பட்டு, ரன் அவுட் ஆக, போட்டி மும்பை அணிக்கு சாதகமாக மாறியது. வாட்சன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷர்துல் தாக்குர் ஆச்சரியம்

ஷர்துல் தாக்குர் ஆச்சரியம்

இந்த ரன் அவுட்டில் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன் இடம் ஜடேஜாவுக்கு கிடைக்கவில்லை என்பது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அடுத்து பேட்டிங் செய்ய ஹர்பஜன் அல்லது தீபக் சாஹர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்ய வந்தார்.

1 ரன்னில் வெற்றி

1 ரன்னில் வெற்றி

கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவை. 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் ஷர்துல். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் கூட சூப்பர் ஓவர் செல்லலாம் என்ற நிலையில், எல்.பி.டபுள்யூ ஆனார் ஷர்துல். மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரசிகர்கள் ஹார்ட் பீட் கடைசி ஓவரில் எகிறி அடித்தது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை அணி தோனி, வாட்சன் ரன் அவுட்களால் தோல்வி அடைந்தது. மலிங்கா ரன்களை வாரிக் கொடுத்து இருந்தாலும், கடைசி ஓவரில் தன் அனுபவத்தைக் காட்டி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். நல்ல தரமான டி20 இறுதிப் போட்டியைக் கண்ட உற்சாகத்துடன் டி20 ரசிகர்கள் திருப்தி அடைந்தனர். சில சென்னை அணி ரசிகர்கள் 1 ரன் தோல்வியால் கண் கலங்கினர்.

Story first published: Monday, May 13, 2019, 0:50 [IST]
Other articles published on May 13, 2019
English summary
IPL 2019 MI vs CSK : Mumbai Indians vs Chennai Super Kings 2019 final match report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X