For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரு எப்பவுமே இப்படித்தான்.. முக்கியமான நேரத்தில் தோனி விக்கெட்டை கோட்டை விட்ட பும்ரா!

சென்னை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2019 ஐபிஎல் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் தோனி பேட்டிங் செய்த போது, பும்ரா பந்தில் கேட்ச் கொடுத்தார். ஆனால், அம்பயர் ரீப்ளேவில் பார்த்த பின்னர் அவுட் இல்லை என அறிவித்தார். அதற்கு காரணம் பும்ரா தான்!

IPL 2019 MI vs CSK Qualifier 1 : Bumrah’s no ball wicket as Dhoni bat flies

சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த போது 19 ஓவர்களில் 122 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்தது. கடைசி ஓவரில் ரன் சேர்த்தால் தான் நல்ல இலக்கை நிர்ணயிக்க முடியும் என்ற நிலையில், தோனி பேட்டிங் செய்தார். பும்ரா கடைசி ஓவரை வீசினார்.

1
45946

அந்த ஓவரின் முதல் பந்தை தோனி வேகமாக அடிக்க, அவரது பேட் ஒருபுறம் பறந்தது. மறுபுறம், பந்தை கேட்ச் பிடித்தார் இஷான் கிஷன். தோனி அவுட் என மும்பை வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், அம்பயர் ரீப்ளே பார்த்துவிட்டு, நோ-பால் என அறிவித்தார்.

IPL 2019 MI vs CSK Qualifier 1 : Bumrah’s no ball wicket as Dhoni bat flies

பலரின் வாழ்க்கையை கெடுக்கிறார் அப்ரிடி.! பாயும் இம்ரான் பர்கத் பலரின் வாழ்க்கையை கெடுக்கிறார் அப்ரிடி.! பாயும் இம்ரான் பர்கத்

பும்ரா காலை கிரீஸை விட்டு ஒரு இன்ச் முன்னே வைத்ததால், அந்த பந்து நோ-பால் ஆனது. தோனி இதன் மூலம் தப்பித்தார். பும்ரா முக்கியமான போட்டிகளில் நோ-பாலில் விக்கெட் எடுத்து, ஏமாறுவது முதல் முறையல்ல.

முன்பு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் பாக்கர் ஜமான் பேட்டிங் செய்த போது, இதே போல நோ-பால் விக்கெட் எடுத்து, இந்திய அணியின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதால், பும்ரா தப்பித்தார். இருந்தாலும், பலரும் இணையத்தில் பும்ராவை கேலி செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, May 8, 2019, 13:21 [IST]
Other articles published on May 8, 2019
English summary
IPL 2019 MI vs CSK Qualifier 1 : Bumrah’s no ball wicket as Dhoni bat flies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X