For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை தடுத்து நிறுத்த இந்த 2 பேர் போதும்.. ரோஹித் சர்மாவின் திட்டம் இதுதான்!

Recommended Video

IPL 2019 finals: Chennai vs Mumbai | தோனியை தடுக்க 2 பேர் ! ரோஹித் சர்மாவின் திட்டம்!

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கடந்த சீசனின் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த இரு அணிகளும், ஐபிஎல் தொடரின் இந்தியா - பாகிஸ்தான் போல என கூறப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணியின் பெரிய பலம் தோனி தான்.

மிடில் ஆர்டரில் தோனியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தி விட்டாலே மும்பை அணிக்கு பாதி வெற்றி கிடைத்தது போலத் தான்.

தோனி ரன் குவிப்பு

தோனி ரன் குவிப்பு

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தான் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். 11 இன்னிங்க்ஸ்களில் 414 ரன்கள் குவித்துள்ளார். எனவே, இறுதிப் போட்டியில் அவரை தடுத்து நிறுத்தவே மும்பை இந்தியன்ஸ் அதிகமாக திட்டமிடும்.

அந்த 2 வீரர்கள்

அந்த 2 வீரர்கள்

தோனியை தடுத்து நிறுத்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா வசம் இரண்டு வீரர்கள் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் பும்ரா மற்றும் ஹர்திக் பண்டியா.

பும்ரா ஆதிக்கம்

பும்ரா ஆதிக்கம்

2019 ஐபிஎல் தொடரில் பும்ரா பந்துவீச்சில் தோனி தடுமாறியுள்ளார். ஒட்டுமொத்தமாக பும்ரா பந்துவீச்சில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 102 மட்டுமே. மேலும், பும்ரா பந்துவீச்சை ஏழு முறை சந்தித்துள்ள தோனி, அதில் மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார்.

ஹர்திக் பண்டியா எப்படி?

ஹர்திக் பண்டியா எப்படி?

எனவே, தோனி பேட்டிங் செய்ய வரும் போது ரோஹித் சர்மா, பும்ராவை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. தோனி பேட்டிங் செய்யத் திணறும் மற்றொரு மும்பை பந்துவீச்சாளர் ஹர்திக் பண்டியா. அவரது பந்துவீச்சில் ஸ்ட்ரைக் ரேட் படுமோசமாக 80 ஆக உள்ளது.

ரோஹித் சர்மாவின்

ரோஹித் சர்மாவின்

மேலும், நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சந்திப்பில், ஹர்திக் பண்டியா பந்துவீச்சில் தோனி ரன் குவிக்க தடுமாறியதுடன், ஆட்டமிழந்தார். எனவே, ரோஹித் சர்மா தோனியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி, விக்கெட் எடுக்க பும்ரா, ஹர்திக் பண்டியா ஆகிய இருவரைத் தான் நம்புவார்.

துவக்க ஜோடி

துவக்க ஜோடி

தோனி தவிர்த்து, இரண்டாம் தகுதிப் போட்டியில் திடீரென அதிரடி காட்டிய வாட்சன் - டு ப்ளேசிஸ் ஜோடியும், மும்பை அணிக்கு இறுதிப் போட்டியில் சவால் அளிக்கலாம். சென்னை - மும்பை இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பை கைப்பற்றி உள்ளன. எனவே, இந்த முறை கோப்பை வெல்லும் அணி மற்ற அணியை முந்தும்.

Story first published: Sunday, May 12, 2019, 11:14 [IST]
Other articles published on May 12, 2019
English summary
IPL 2019 MI vs CSK : Rohit sharma may use Hardik Pandya, Bumrah to stop Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X