For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை வான்கடே மைதானத்தில் தாக்குதல் அபாயம்? பரவும் வதந்தி.. பின்னணியில் சதித் திட்டமா??

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் தாக்குதல் நடைபெறலாம் என ஒரு வதந்தி பரவி வருகிறது.

2019 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்தது.

தல தோனியின் அருகில் இருக்கும் இந்த சின்ன பையன் யார்...? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் தல தோனியின் அருகில் இருக்கும் இந்த சின்ன பையன் யார்...? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

வதந்தி

வதந்தி

அந்த போட்டிக்கு முந்தைய தினமான வெள்ளிக்கிழமை அன்று மும்பை - ராஜஸ்தான் போட்டியின் போது தாக்குதல் நடைபெறலாம் என வதந்தி பரவியது. இது வெறும் வதந்தி தானா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.

ரசிகர்கள் பீதி

ரசிகர்கள் பீதி

குறிப்பாக டிக்கெட் வாங்கி மைதானம் செல்லவிருந்த ரசிகர்கள் இந்த வதந்தியால் பீதி அடைந்தனர். போட்டியை காண செல்லலாமா? என அவர்கள் சிந்தித்துக் கொண்டு இருந்த நிலையில், மும்பை காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விளக்கம்

காவல்துறை விளக்கம்

மும்பை காவல்துறை சார்பாக டிசிபி மஞ்சுநாத் செங்கே இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்தார். இதுவரை தாக்குதல் குறித்து எந்த உளவு அமைப்பும் கூறவில்லை. காவல்துறையை பொறுத்தவரை போட்டியின் போது அதிக மக்கள் செல்லாதவாறு ரசிகர்களை திசை திருப்ப நடந்த சதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது என்றார்.

நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை காவல்துறை அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், மக்கள் தாக்குதல் குறித்த பொய் செய்தி, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், காவல்துறை விழிப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

Story first published: Saturday, April 13, 2019, 17:05 [IST]
Other articles published on Apr 13, 2019
English summary
IPL 2019 MI vs RR : Mumbai police clears rumours of possible threat at Wankhede stadium
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X