For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டிக்கு நடுவே.. லைவ் டிவியில்.. பச்சையாக கெட்ட வார்த்தை பேசிய ராகுல்.. ரசிகர்கள் ஷாக்!

பெங்களூரு : ஐபிஎல் போட்டியின் நேரலையில் பஞ்சாப் அணி வீரர் கே எல் ராகுல், மைக்கில் கெட்ட வார்த்தை பேசியதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஆன 42வது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது, இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

குல்தீப் யாதவ் பார்ம் அவுட் தான்.. ஆனா ஒரு பிரச்சனையும் இல்லை.. புட்டு புட்டு வைத்த ஹர்பஜன் சிங்! குல்தீப் யாதவ் பார்ம் அவுட் தான்.. ஆனா ஒரு பிரச்சனையும் இல்லை.. புட்டு புட்டு வைத்த ஹர்பஜன் சிங்!

பெங்களூர் துவக்கம்

பெங்களூர் துவக்கம்

பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேல் - விராட் கோலி களமிறங்கி ஆடி வந்தனர். அப்போது பஞ்சாப் வீரர் ராகுல், வயர்லெஸ் மைக்கில், வர்ணனையாளர்களுடன் பேசி வந்தார்.

உணர்ச்சிவசப்பட்டு…

உணர்ச்சிவசப்பட்டு…

இந்தப் போட்டியில் பெங்களூர் அணியை 160-180 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்பது பற்றி ராகுல் கூறினார். அப்போது பார்த்திவ் பட்டேல் ஒரு ஃபோர் அடித்தார். இதைக் கண்ட ராகுல் உணர்ச்சிவசப்பட்டு மைக்கில் கெட்ட வார்த்தையில் கத்தினார்.

ஆங்கில வார்த்தை

ஆங்கில வார்த்தை

ஆங்கில "எஃப்" வார்த்தையை தான் கூறினார் ராகுல். சுமார் 20 நொடிகளுக்கு பின், தான் லைவ்வில் கெட்ட வார்த்தை பேசி விட்டோம் என்பதையே உணர்ந்தார் ராகுல். இந்த நிகழ்வைக் கண்டு ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொறுப்பில்லை

பொறுப்பில்லை

ஐபிஎல் தொடரை குடும்பத்தோடு பார்ப்பவர்கள் உண்டு. பள்ளி விடுமுறை என்பதால் இந்தியா முழுவதும் சிறுவர்கள் ஐபிஎல் தொடரில் மூழ்கி இருக்கிறார்கள். இந்த நிலையில், பொறுப்பில்லாமல் லைவ் டிவியில் கெட்ட வார்த்தை உபயோகித்துள்ளார் ராகுல்.

அபராதம்

அபராதம்

கடந்த வாரம் தான் "காபி வித் கரன்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தவறாக பேசியதற்கு, விசாரணை நடைபெற்று அதில் 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்குள் மற்றொரு விவகாரத்தில் சிக்கி உள்ளார்.

Story first published: Wednesday, April 24, 2019, 22:30 [IST]
Other articles published on Apr 24, 2019
English summary
IPL 2019 RCB vs KXIP : K L Rahul swear on live camera and asked to remove his mic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X