என் விக்கெட்டை எடுத்துட்டு.. அப்படி என்ன கொண்டாட்டம் வேண்டிக் கிடக்கு.. இளம் வீரரை கலாய்த்த கோலி!

என் விக்கெட்டை எப்படி கொண்டாடின ? கலாய்த்த கோஹ்லி

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடந்த 54வது ஐபிஎல் லீக் போட்டியில் கோலி விக்கெட்டை வீழ்த்திய கலீல் அஹ்மது, அதை வித்தியாசமாக கொண்டாடினார்.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி வெற்றி பெற்றது என்றாலும், துவக்கத்தில் முக்கிய விக்கெட்கள் அனைத்தையும் இழந்து தவித்தது.

முகபாவனை

முகபாவனை

இளம் வீரர் கலீல் அஹ்மது, விராட் கோலியின் விக்கெட்டை 2வது ஓவரிலேயே வீழ்த்தினார். கோலி அப்போது 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். கோலியின் விக்கெட்டை எடுத்த பின் கலீல் அஹ்மது பயங்கர உற்சாகம் அடைந்து இரண்டு கை முட்டிகளையும் மடக்கி, வித்தியாசமான முகபாவனை காட்டி கொண்டாடினார்.

விராட் கோலி கிண்டல்

விராட் கோலி கிண்டல்

போட்டி முடிந்த பின், விராட் கோலி மற்றும் பிற பெங்களூர் அணியினருடன் கலீல் அஹ்மது பேசிக் கொண்டிருந்தார். அப்போது கோலி, கலீல் அஹ்மது எப்படி தன் விக்கெட்டை எடுத்துவிட்டு விசித்திரமாக கொண்டாடினார் என செய்து காட்டினார்.

கலாய்த்து அனுப்பினார்

கலாய்த்து அனுப்பினார்

அதைக் கண்டு கலீல் அஹ்மது வெடித்துச் சிரித்தார். கோலியும் சிரித்துக் கொண்டே கலீல் அஹ்மதை செமையாக கலாய்த்து அனுப்பினார். கலீல் அஹ்மது இந்த சீசன் ஐபிஎல் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தினார்.

வாய்ப்பு கிடைக்கும்

வாய்ப்பு கிடைக்கும்

இந்த சீசனில் 8 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 17 விக்கெட்கள் அள்ளியுள்ளார் கலீல் அஹ்மது. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை அணித் தேர்வில், கலீல் அஹ்மது தேர்வு செய்யப்படவில்லை. எனினும், தற்போதைய ஐபிஎல் செயல்பாடுகளால், இந்திய அணியில் மீண்டும் இணையும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2019 RCB vs SRH : Virat Kohli mocks Khaleel Ahmed’s Wicket celebration after the match.
Story first published: Sunday, May 5, 2019, 17:09 [IST]
Other articles published on May 5, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X