இப்படித்தான்யா பேசிப் பேசியே மயக்குறாரு.. கடைசி போட்டி முடிந்த உடன் ரசிகர்களுக்கு ஐஸ் வைத்த கோலி!

பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான 54வது லீக் போட்டியுடன் இந்த ஆண்டு ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை. எனினும், அந்த அணியை ஆதரித்து வரும் ரசிகர்கள் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. போட்டியில் தோற்றாலும், ஏதாவது "சால்ஜாப்பு" சொல்லி அவர்களை மயக்கிவிடுகிறார் கோலி.

ஆறுதல் வெற்றி

ஆறுதல் வெற்றி

இந்த ஆண்டும் மோசமாக ஆடிய பெங்களூர் அணி 14 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மட்டுமே பெற்றது. இதில் கடைசி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலாக்கி விட்டு, ஆறுதல் தேடியது பெங்களூர் அணி.

ஐஸ் வைத்த கோலி

ஐஸ் வைத்த கோலி

அந்த வெற்றிக்குப் பின், கடைசியாக பெங்களூர் அணி ரசிகர்கள் குறித்து பேசிய கோலி, "உங்கள் வலி எனக்குப் புரிகிறது. இந்த கூட்டத்துக்கு தலை வணங்குகிறேன். ஐபிஎல்-இல் இவர்கள் தான் சிறந்த ரசிகர்கள்" என ஐஸ் வைத்துப் பேசினார்.

மயங்கிய ரசிகர்கள்

மயங்கிய ரசிகர்கள்

தீவிர பெங்களூர் + கோலி ரசிகர்கள், கோலி பேசியதைக் கேட்டு மயங்கினர். "எப்படியும் அடுத்த ஆண்டு பெங்களூர் தான் கப் அடிக்கும்.." என பேசிக் கொண்டே சென்றுவிட்டனர். ஆனால், மற்ற அணி ரசிகர்கள், கோலியை கலாய்த்து வருகிறார்கள்.

அங்கேயே இருக்காங்களே

அங்கேயே இருக்காங்களே

அவர்கள், பெங்களூர் அணி ரசிகர்கள் தான் ஐபிஎல்-இன் சிறந்த ரசிகர்கள்.. இத்தனை தடவை அந்த அணி தோல்வி அடைந்தும், கோலி, டி வில்லியர்ஸ்-க்காக விடாப்பிடியா அங்கேயே இருக்காங்களே.. என கலாய்த்து வருகிறார்கள்.

அடுத்த வருடம் எப்படி?

அடுத்த வருடம் எப்படி?

அடுத்த வருடம், கோலி ரசிகர்களுக்கு மயக்கி, ஐஸ் வைத்து பேசுகிறாரா, இல்லையா என்பதை வைத்து அந்த அணி பிளே-ஆஃப் சென்றுவிட்டதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2019 RCB vs SRH : Virat Kohli says I feel your pain after the end of IPL 2019
Story first published: Sunday, May 5, 2019, 8:45 [IST]
Other articles published on May 5, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X