For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நல்ல நேரத்துல கேட்ச்சை விட்டுட்டாரு.. பேட்டிங்கும் சரியில்லை.. இவரை ஏங்க டீம்ல எடுத்தீங்க!!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ஆன பரபரப்பான லீக் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

அந்த அணி பீல்டிங்கில் நிறைய ரன்களை கோட்டை விட்டது. அது ஒருபுறம் இருக்க, யூசுப் பதான், போட்டியின் முக்கியமான கட்டத்தில் கைக்கு வந்த கேட்ச்சை விட்டுவிட்டார். அது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

அம்பயரின் தவறான தீர்ப்பு.. கடுப்பாகி அம்பயர் அருகே வந்த கோலி.. அப்புறம் என்ன நடந்தது?அம்பயரின் தவறான தீர்ப்பு.. கடுப்பாகி அம்பயர் அருகே வந்த கோலி.. அப்புறம் என்ன நடந்தது?

முக்கிய விக்கெட்கள் காலி

முக்கிய விக்கெட்கள் காலி

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதல் 3 ஓவர்களுக்குள் பார்த்திவ் பட்டேல், கோலி, டி வில்லியர்ஸ் என முக்கிய விக்கெட்கள் எல்லாம் காலி.

அதிரடி ஜோடி

அதிரடி ஜோடி

எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என குஷியில் இருந்தது ஹைதராபாத் கூடாரம். ஆனால், அப்போது எதிர்பாராவிதமாக ஹெட்மயர், குர்கீரத் சிங் ஜோடி ரன் குவிக்கத் துவங்கியது. அவர்கள் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல், ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

எளிய கேட்ச் நழுவியது

எளிய கேட்ச் நழுவியது

அரைசதம் அடித்த நிலையில் ஹெட்மயர், 13வது ஓவரில். புவனேஸ்வர் பந்துவீச்சில், யூசுப் பதான் நின்ற இடத்தை நோக்கி எளிய கேட்ச் கொடுத்தார். யூசுப் பதான் தன் கைகள் வரை வந்த பந்தை நழுவ விட்டார்.

குர்கீரத் அதிரடி

குர்கீரத் அதிரடி

இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்தது ஹைதராபாத் அணி. அதன்பின் ஹெட்மயர் சற்றே அடக்கி வாசிக்க, குர்கீரத் அடித்து நொறுக்கி அரைசதம் கடந்தார். இந்த ஜோடியின் அதிரடியால், வெற்றி பெற்றது

பேட்டிங்கும் சரியில்லை

பேட்டிங்கும் சரியில்லை

யூசுப் பதான் கேட்ச்சை நழுவ விட்டதோடு, பேட்டிங்கின் போது 3 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆக, "அணிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், இப்படி நல்ல நேரத்தில் கேட்ச்சைவிட்டு ஆப்பு வைத்துவிட்டாரே.." என புலம்பியபடி சென்றனர் ஹைதராபாத் ரசிகர்கள்.

ஏன் களமிறக்கினார்கள்?

ஏன் களமிறக்கினார்கள்?

முதலில் ஹைதராபாத் அணியின் 9 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்ற யூசுப், அணிக்கு பெரிய அளவில் பயன்படவில்லை என்று, அடுத்த நான்கு போட்டிகளில் அவரை தேர்வு செய்யவில்லை. திடீரென, முக்கியமான கடைசி போட்டியில் அவரை ஏன் களமிறக்கினார்கள்?

Story first published: Sunday, May 5, 2019, 9:17 [IST]
Other articles published on May 5, 2019
English summary
IPL 2019 RCB vs SRH : Yusuf Pathan dropped catch of Hetmyer which costs the match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X