For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கா இடம் கிடையாது.. என்னை பதவியில இருந்தா தூக்குறீங்க.. பொங்கி எழுந்த ரஹானே!

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரில் துவக்கம் முதல் சுமாரான ஆட்டம் ஆடி வந்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரஹானே.

ஆனால், தனக்கு நேர்ந்த பின்னடைவுகள், பதவி இழப்பு ஆகியவற்றை கண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அருமையான பேட்டிங் மூலம் தன் பதிலடியை கொடுத்தார்.

இவருக்கு என்னாமா பில்டப் கொடுத்தீங்க.. கடைசியில காமெடி பீஸா மாத்திட்டாங்களே.. உலகமகா டக்-அவுட்!! இவருக்கு என்னாமா பில்டப் கொடுத்தீங்க.. கடைசியில காமெடி பீஸா மாத்திட்டாங்களே.. உலகமகா டக்-அவுட்!!

இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இந்த ஐபிஎல் தொடரை துவக்கிய ரஹானே, அப்படியே உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என நம்பினார். ஆனால், உலகக்கோப்பை அணியில் ரஹானேவுக்கு இடம் கிடைக்கவில்லை.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

அதே சமயம், ராஜஸ்தான் அணி பல தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், கேப்டன் பதவியும் பாதி தொடரில் பறிபோனது. ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

பேட்ஸ்மேன் மட்டுமே

பேட்ஸ்மேன் மட்டுமே

ரஹானே வெறும் பேட்ஸ்மேன் ஆனார். ஏற்கனவே, ரஹானே பேட்டிங் குறித்தும் விமர்சனங்கள் இருந்தது. இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பொங்கி எழுந்த ரஹானே சதம் அடித்து கலக்கினார்.

சதம்

சதம்

துவக்க வீரராக களம் இறங்கிய ரஹானே கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று சதம் அடித்தார். இன்னிங்க்ஸ் முடிவில் 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்திருந்தார் ரஹானே. கடைசியாக 2012 ஐபிஎல் தொடரில் ரஹானே சதம் அடித்து இருந்தார்.

ஏழு ஆண்டுகள்

ஏழு ஆண்டுகள்

சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடரில் சதம் அடித்துள்ளார். இந்த சதத்தால் பறிபோன கேப்டன் பதவியோ, உலகக்கோப்பை அணியில் இடமோ கிடைக்காவிட்டாலும், ரஹானே தன் பெயரை நிலை நாட்டி உள்ளார். இதே பார்மை தொடர்ந்தால், ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் செல்வது சுலபமாக மாறிவிடும்.

Story first published: Monday, April 22, 2019, 23:16 [IST]
Other articles published on Apr 22, 2019
English summary
IPL 2019 RR vs DC : Ajinkya Rahane hit century in IPL after seven years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X