For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தப்பை உங்க மேலே வச்சுக்கிட்டு.. ரஹானேவை முறைச்சுட்டு போறது என்ன நியாயம்?

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் பரிதாபமான முறையில் ரன் அவுட் ஆனார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ராஜஸ்தான் அணி. அந்த அணிக்கு ரஹானே, சஞ்சு சாம்சன் துவக்கம் அளித்தனர்.

எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்... உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்... உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது

பந்தை கவனிக்காத சாம்சன்

பந்தை கவனிக்காத சாம்சன்

இரண்டாவது ஓவரின் முதல் பந்தை ரபாடா வீசினார். ரஹானே பந்தை அருகே தட்டி விட்டு ரன் ஓட முயன்றார். எதிரில் இருந்த சஞ்சு சாம்சன், பந்தை கவனிக்காமல் ரன் ஓடத் துவங்கினார்.

அருமையான த்ரோ

அருமையான த்ரோ

பந்தை, ரபாடா எடுத்துவிட்டதை கண்ட ரஹானே ரன் ஓடாமல், சஞ்சு சாம்சனை எச்சரித்தார். ஆனால், சாம்சன் அதற்குள் பாதி தூரத்திற்கும் மேல் ஓடி விட்டார். ரபாடா நின்ற இடத்தில் இருந்து அருமையாக த்ரோ செய்ய, சாம்சன் ரன் அவுட் ஆனார்.

முறைத்த சாம்சன்

முறைத்த சாம்சன்

ரன் அவுட் ஆன பின் சாம்சன், ரஹானேவை முறைத்து விட்டு, புலம்பிக் கொண்டே சென்றார். ஆனால், ரஹானே ஓடத் துவங்கினாலும், சஞ்சு சாம்சன் பந்தை கவனித்து இருக்க வேண்டும். அவர் பந்தை கவனிக்காமல், ரஹானேவை மட்டும் பார்த்துவிட்டு ஓடியதே ரன் அவுட்டுக்கு முக்கிய காரணம்.

ரஹானே சதம்

ரஹானே சதம்

சஞ்சு சாம்சன் ஒரு பந்தை கூட சந்திக்காமல், ரன் ஏதும் எடுக்காமல் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட்டை ஈடு கட்டும் வகையில், ரஹானே இந்தப் போட்டியில் சதம் அடித்து கலக்கினார். எனினும், ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன்.. தப்பை உங்க மேலே வச்சுக்கிட்டு.. ரஹானேவை முறைச்சுட்டு போறது என்ன நியாயம்?

Story first published: Monday, April 22, 2019, 23:55 [IST]
Other articles published on Apr 22, 2019
English summary
IPL 2019 RR vs DC : Sanju Samson run out after got confused with Rahane
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X