For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் கூட பரவாயில்லை.. ஆனா கேப்டன் கோலி வாங்குன மார்க்கை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருதே!!

மும்பை : இந்திய அணியின் கேப்டன் கோலி எத்தனை வெற்றிகள் பெற்றுக் கொடுத்தாலும் அவரை சிறந்த கேப்டன் என பல கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் ஒப்புக் கொள்வதில்லை.

இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்தாலும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பது போல, வருடா வருடம் ஐபிஎல் தொடரில் சறுக்கி விடுவார் கோலி.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் முடிவில் ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்கு மதிப்பெண் போட்ட முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பகிரங்கமாக கோலிக்கு மோசமான மதிப்பெண் கொடுத்துள்ளார்.

நாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்!!நாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்!!

அஸ்வின் அதிகம்

அஸ்வின் அதிகம்

அஸ்வின், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கூட கோலியை விட சிறந்த அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஐபிஎல் கேப்டன்களுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தார்? அதில் கோலி வாங்கியது எத்தனை?

தோனி டாப்

தோனி டாப்

2019 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்த சென்னை அணியின் கேப்டன் தோனி 10க்கு 9 மதிப்பெண் பெற்றுள்ளார். அடுத்து கோப்பை வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் 8, சிறப்பாக டெல்லி அணியை வழி நடத்திய இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 மதிப்பெண் கொடுத்துள்ளார் சஞ்சய்.

அஸ்வின் எத்தனை?

அஸ்வின் எத்தனை?

பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் 7 மதிப்பெண் வழங்கி உள்ளார். தட்டுத் தடுமாறி பிளே-ஆஃப் சென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் 7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

ரஹானே மோசம்

ரஹானே மோசம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாம் பாதி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 6, முதல் பாதி கேப்டன் ரஹானேவுக்கு 5 கொடுத்தார். இதில் ரஹானே தலைமையில் பல போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

கோலி வாங்கிய மதிப்பெண்

கோலி வாங்கிய மதிப்பெண்

முதலில் சறுக்கினாலும் இறுதியாக சில போட்டிகளில் நன்றாக ஆடிய பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கு வெறும் 6 மதிப்பெண் மட்டுமே கொடுத்துள்ளார் சஞ்சய். ஒரு முன்னணி தேசிய அணியின் கேப்டன், டெஸ்ட்டில் நம்பர் 1 அணியின் கேப்டன், ஒருநாள் போட்டிகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியின் கேப்டனுக்கு, ஐபிஎல் தொடரில் 10க்கு 6 மதிப்பெண் மட்டுமே கொடுத்துள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

அஸ்வின் ஐபிஎல் தொடரில் பல புதிய முடிவுகள் எடுத்தாலும், அதில் பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்தார். ஆனால், அவரைக் காட்டிலும் மோசமான மதிப்பெண் பெற்று இருக்கிறார் கோலி. ஏற்கனவே, இந்திய அணிக்கு ரோஹித் சர்மாதான் சரியான கேப்டன் என முன்னாள் வீரர் கம்பீர் சூசகமாக கூறி வருகிறார். இந்த நிலைமையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரும், கோலி காலை வாரி விட்டுள்ளார்.

Story first published: Thursday, May 16, 2019, 19:00 [IST]
Other articles published on May 16, 2019
English summary
IPL 2019 : Sanjay Manjrekar rated Virat Kohli too low among other IPL captains
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X