என்னப்பா.. முக்கியமான போட்டி.. கூட்டம் பிச்சிக்கும்னு பார்த்தா.. இப்படி ஆகிப் போச்சு!! #SRHvsDC

விசாகப்பட்டினம் : 2019 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின் தகுதி நீக்கப் போட்டி (Eliminator) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு நேரில் வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற லீக் போட்டிகளைக் காட்டிலும், பிளே-ஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்ற நிலைக்கு மாறாக, ஹைதராபாத் - டெல்லி அணிகள் போட்டியைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.

டெல்லி அணிக்கு விசாகப்பட்டினத்தில் அதிக ரசிகர்கள் இல்லாவிட்டாலும், ஹைதராபாத் அணியை காண அதிக ரசிகர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், மைதானம் நிரம்பும் அளவு கூட்டம் வரவில்லை.

மும்பை இந்தியன்ஸ் ஃபைனலுக்கு போனா.. தோனி டீம் கூட தான் ஆடியாகணும்.. அதுதானப்பா உலக வழக்கம்!

சன்ரைசர்ஸ் அணி ஆடிய லீக் போட்டிகள் அனைத்தும் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அப்போது மைதானம் நிரம்பி வழிந்தது. ஒருவேளை, அதே மைதானத்தில் இந்தப் போட்டியும் நடைபெற்று இருந்தால் அதிக கூட்டம் வந்திருக்கக் கூடும்.

மேலும், ஹைதராபாத் அணியில் நட்சத்திர வீரர்களாக வலம் வந்து ரன் மழை பொழிந்த டேவிட் வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி தொடரின் பாதியில் தங்கள் நாட்டுக்கு திரும்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2019 SRH vs DC Eliminator : poor anticipation for the eliminator match in Visakhapatnam
Story first published: Wednesday, May 8, 2019, 20:29 [IST]
Other articles published on May 8, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X