குலுங்கி.. குலுங்கி.. கண்ணீர் விட்ட சன்ரைசர்ஸ் பயிற்சியாளர்.. பார்க்கவே பரிதாபமா இருக்கே!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடரில் தகுதி நீக்கப் போட்டியில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

அதைத் தாங்க முடியாத அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கண்ணீர் விட்டு அழுதார். அந்த காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது.

கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் தடுமாறியது. லீக் சுற்றின் கடைசி சில போட்டிகள் தவிர மற்ற போட்டிகளில் அந்த அணிக்கு தூணாக விளங்கினர் டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ.

1
45947

அவர்கள் இருவரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தங்கள் நாடுகளுக்கு திரும்பினர். அவர்கள் அணியில் இருக்கும் போதே, வெற்றி - தோல்விகளை மாறி, மாறி சந்தித்த ஹைதராபாத் அணி, அவர்கள் சென்ற பின் மோசமான அணிகளில் ஒன்றாக மாறியது.

கூட்டிக் கழிச்சு பார்த்தா.. சிஎஸ்கே எப்படியும் ஃபைனலுக்கு போயிடும்.. ரசிகர்கள் போடும் கணக்கு!

பிளே-ஆஃப் சுற்றுக்கு வெறும் 12 புள்ளிகளுடன் தகுதி பெற்ற முதல் அணி என்ற மோசமான பெருமையை பெற்றது சன்ரைசர்ஸ். பிளே-ஆஃப் சுற்றில் தகுதி நீக்கப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சந்தித்தது.

அந்தப் போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் எடுத்த சில தவறான முடிவுகள் அணியை தோல்விப் பாதைக்கு இட்டுச் சென்றது. குறிப்பாக 18வது ஓவரை அனுபவம் குறைந்த பேஸில் தம்பியிடம் கொடுத்தார் கேன். அதன் பலனாக அந்த ஓவரில் 22 ரன்கள் குவித்து வெற்றிக்கு மிக அருகே எளிதாக சென்றது டெல்லி. பின்னர் 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதைக் கண்ட டாம் மூடி குலுங்கி, குலுங்கி கண்ணீர் சிந்தினார். ஆஸ்திரேலிய அணி அதன் உச்சகட்டத்தில் இருந்த போது, அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் டாம் மூடி. அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி அசைக்க முடியாத அணிகளில் ஒன்றாக வலம் வந்தது.

அதே போல, கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியும் தொடரின் முதல் பாதியில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து, மலைக்க வைத்தது. ஆனால், இந்த ஆண்டு பல தவறான முடிவுகள், அணித் தேர்வுகளால், தோல்வியை சந்தித்துள்ளது ஹைதராபாத்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2019 SRH vs DC Eliminator : SRH Coach Tom Moody in full of tears after loss
Story first published: Thursday, May 9, 2019, 15:13 [IST]
Other articles published on May 9, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X