For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது வரைக்கும் “செஞ்சதே” போதும்.. குல்தீப் யாதவ், உத்தப்பாவை கழட்டி விட்ட கொல்கத்தா!

Recommended Video

IPL 2019: Hyderabad vs Kolkata | ஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு

ஹைதராபாத் : தற்போது நடைபெற்று வரும் 2019 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணியில் இதுவரை அனைத்து போட்டிகளிலும் ஆடி வந்த மூன்று வீரர்கள் நீக்கப்பட்டனர்.

கொல்கத்தா அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா பிளே-ஆஃப் செல்வது உறுதியாகும்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் சிக்ஸா அடிச்சு தள்ள.. கிறிஸ் கெயில் சொன்ன அந்த ரகசியம் தான் காரணம்! ஆண்ட்ரே ரஸ்ஸல் சிக்ஸா அடிச்சு தள்ள.. கிறிஸ் கெயில் சொன்ன அந்த ரகசியம் தான் காரணம்!

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில், இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத மூன்று வீரர்களை கொல்கத்தா அணி நீக்கியுள்ளது. குல்தீப் யாதவ், ராபின் உத்தப்பா, பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் இந்த முறை ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டை அளித்துள்ளனர்.

மோசமான செயல்பாடு

மோசமான செயல்பாடு

அதிலும் குறிப்பாக, பெங்களூர் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்திருந்தார். அதே போட்டியில் 214 ரன்களை சேஸ் செய்த போது, உத்தப்பா 20 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அணியை இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றார்.

முன்னணி பந்துவீச்சாளர்

முன்னணி பந்துவீச்சாளர்

இதையடுத்து, இவர்கள் இருவரையும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கியுள்ளது கொல்கத்தா. இவர்களில் குல்தீப் யாதவ் சர்வதேச போட்டிகளில் கில்லியாக செயல்பட்டு வந்தவர். டி20 மற்றும் ஒருநாள் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசித் நீக்கம் ஏன்?

பிரசித் நீக்கம் ஏன்?

பிரசித் கிருஷ்ணா உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வரும் வீரர். பிரசித் கிருஷ்ணா இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு சராசரியாக, ஓவருக்கு 9 ரன்கள் வைத்துள்ளார். பெங்களூர் போட்டியில் 4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்திருந்தார்.

Story first published: Sunday, April 21, 2019, 19:03 [IST]
Other articles published on Apr 21, 2019
English summary
IPL 2019 SRH vs KKR : Kuldeep Yadav, Robin Uthappa dropped by KKR
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X