For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்கெல்லாம் சூப்பர் பவர் தெரியுமுல்ல.. ஐபிஎல் நஷ்டத்துல மூழ்கப் போகுது.. பாக். அமைச்சர் அலப்பறை!!

Recommended Video

பாகிஸ்தானில் இனி ஐபிஎல் வராது : பாக். அமைச்சர்- வீடியோ

இஸ்லாமாபாத் : 2019 ஐபிஎல் தொடர் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் ஐபிஎல் தொடர் பிரம்மாண்டமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் ஐபிஎல் தொடர் ஒளிபரப்பாகாது என் அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பாவாத் அஹ்மது சௌத்ரி கூறியுள்ளார்.

25 பந்துகளில் 100.. ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்.. கிறிஸ் கெயில் ரெக்கார்டை ஓரங்கட்டிய இளம் வீரர்!! 25 பந்துகளில் 100.. ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்.. கிறிஸ் கெயில் ரெக்கார்டை ஓரங்கட்டிய இளம் வீரர்!!

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதல்

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. அப்போது, பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இந்திய ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

விலகிய இந்திய நிறுவனம்

விலகிய இந்திய நிறுவனம்

மேலும், அந்த டி20 தொடரை தயாரித்து, ஒளிபரப்பும் உரிமையை பெற்று இருந்த இந்திய நிறுவனம், பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகியது. இதனால், தொடரை தொடர்ந்து ஒளிபரப்ப முடியாத இக்கட்டான சூழல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஏற்பட்டது.

பழிக்குப் பழி

பழிக்குப் பழி

இதற்கு பழி தீர்க்கும் வகையில் தற்போது, பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர், ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்பப் போவதில்லை என கூறியுள்ளார். "பாகிஸ்தான் சூப்பர் லீகின் போது இந்திய நிறுவனங்களும், அரசும் நடந்து கொண்ட விதம் மோசமானது. அதன் பின்பு, நாங்கள் ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பாவதை பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் தான் சூப்பர்பவர்!!

பாகிஸ்தான் தான் சூப்பர்பவர்!!

இன்னும் ஒரு படி மேலே போய், "ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகவில்லை என்றால், அது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு தான் நஷ்டம். நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர்பவர்" என கூறி உள்ளார் சௌத்ரி.

நல்ல காமெடி

நல்ல காமெடி

பாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்ப முடியாது என சொல்ல பாகிஸ்தான் நாட்டுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால், அதற்காக "கிரிக்கெட்டில் நாங்கள் தான் சூப்பர்பவர்" என காமெடி செய்வதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தேவையற்ற பேச்சு

தேவையற்ற பேச்சு

சூப்பர்பவர் பாகிஸ்தான் தன் நாட்டில் கிரிக்கெட் ஆட முடியாத நிலையில், ஐக்கிய அரபு நாட்டில் சென்று கிரிக்கெட் ஆடி வருகிறது. அதே போல, ஜிம்பாப்வே தவிர பல முக்கிய கிரிக்கெட் நாடுகள் யாரும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் ஆடத் தயாராக இல்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சூப்பர் பவர் என்ற பேச்சு தேவையற்றது.

Story first published: Friday, March 22, 2019, 13:02 [IST]
Other articles published on Mar 22, 2019
English summary
IPL 2019 won’t be telecasted in Pakistan says minister Fawad Ahmed Chaudhry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X