For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதே நேரம்.. அவருக்கு மட்டும்தான் இப்படி நடக்கும்.. விட்ட இடத்திலேயே விருட்சமாகும் தோனி.. பின்னணி!

அபுதாபி: தோனி இன்று சென்னை அணிக்காக மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு செல்ல இருக்கிறார். இதற்கு பின் மிக முக்கியமான சுவாரசிய சம்பவம் ஒன்றும் இருக்கிறது.

கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் தோனி கிரிக்கெட் போட்டி எதிலும் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் இந்திய அணி கலந்து கொண்ட போட்டிகளிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்திய அணிக்காக ஏதாவது ஒரு ஒருநாள் போட்டியில் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி திடீர் என்று மொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அனைத்து விதமான போட்டிகள்

அனைத்து விதமான போட்டிகள்

ஒருநாள் போட்டிகள் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதனால் தோனி டி20 உலகக் கோப்பை தொடங்கி இனி எதிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்று உறுதியானது. தனது ஓய்வை கடந்த மாதம் 15ம் தேதி இரவு அறிவித்தார்.

ஓய்வு நேரம்

ஓய்வு நேரம்

நான் சர்வதேச போட்டிகளில் இருந்து 19.29 மணி நேரத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி அறிவித்தார். அதாவது மாலை 7.29 மணியில் இருந்து ஓய்வு பெற்றதாக தோனி அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் ஏன் தோனி சரியாக 19.29 மணிக்கு ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

 ஏன் இப்படி

ஏன் இப்படி

அதன்படி தோனி கடைசியாக விளையாடிய போட்டி நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை செமி பைனல் போட்டி. இதில் தோனி அவுட்டாகி வெளியே சென்ற நேரம் 7.29 ஆகும். இதனால் அதே நேரத்தில் தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தோனி இன்று சென்னை அணிக்காக மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு செல்ல இருக்கிறார். இதற்கு பின் மிக முக்கியமான சுவாரசிய சம்பவம் ஒன்றும் இருக்கிறது.

இன்று என்ன

இன்று என்ன

இன்று சென்னை அணிக்கும் - மும்பை அணிக்கும் போட்டி சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனால் 7.29க்கு களத்தை விட்டு சென்றவர், மீண்டும் ஒரு வருடம் கழித்து 7.30 மணிக்கு கிரிக்கெட் களத்திற்கு வந்துள்ளார். தோனி மீண்டும் விட்ட இடத்திலேயே தொடங்க போகிறார்.எங்கு தவறினாரோ அங்கேயே விருட்சமாக வளர போகிறார், என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

ஒரு வருடம் கழித்து தோனி மீண்டும் இப்படி விளையாட வருகிறார். இதனால் கண்டிப்பாக வெறியோடு இருப்பார் . அதோடு எப்படி போனாரோ அதே நேரத்தில் திரும்ப வந்துள்ளார். மும்பையை வேறு எதிர்கொள்ள போகிறார். இதனால் இன்றைய போட்டி மிக சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, September 19, 2020, 16:11 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
IPL 2020: 19:29 an era ended.19:30 a new journey starts for Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X